முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகாவில் முதலில் சிஸ்டத்தை சரிசெய்யுங்கள்: ரஜினிக்கு ஜெயக்குமார் அறிவுரை

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      அரசியல்
Image Unavailable

சென்னை, காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகாவில் முதலில் சிஸ்டத்தை சரி செய்யுங்கள் என அமைச்சர் ஜெயக்குமார் ரஜினிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் முதலில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும் என கூறினார். இது பெரும் விவாதப்பொருளானது. இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் நேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

பி.இ பட்டதாரிகள் தான் சிஸ்டம் சரியில்லை என கூறுவார்கள், ரஜினியும் சிஸ்டம் சரியில்லை என்கிறார். ரஜினிகாந்த் என்ன பி.இ பட்டதாரியா? கர்நாடகாவில் முதலில் காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகாவுக்கு சென்று முதலில் ரஜினி சிஸ்டத்தை சரிசெய்யட்டும். - அமைச்சர் ஜெயக்குமார்

அதாவது பி.இ பட்டதாரிகள் தான் சிஸ்டம் சரியில்லை என கூறுவார்கள், ரஜினியும் சிஸ்டம் சரியில்லை என்கிறார். ரஜினிகாந்த் என்ன பி.இ பட்டதாரியா  என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
 கர்நாடகாவில் முதலில் காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகாவுக்கு சென்று முதலில் ரஜினி சிஸ்டத்தை சரிசெய்யட்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். காவிரி விவகாரம் குறித்து ரஜினி வாய்த்திறக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ரஜினி ஆன்மிக அரசியல் பேசினால் பேசட்டும், நாங்கள் அண்ணாவின் கொள்கைப்படி செயல்படுவோம் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். ஆன்மிகத்தின் மூலம் மதசார்புள்ள அரசை ரஜினி விரும்புகிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அமைதி பூங்கா அ.தி.மு.க.வில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களும் வீரமிக்க புலிகள் என்றும் அவர் கூறினார். தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து