முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப்-4 தேர்வு முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு நடத்துதல் முன்னேற்பாடுகள் தொடர்பாக கண்காணிப்பு அலுவலர்கள், பறக்கும்படை அலுவலர்கள் மற்றும் முதன்மை தேர்வு கண்காணிப்பாளர்கள் கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி  தலைமையில்  நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்

கூட்டத்தில், கலெக்டர்  பேசியதாவது-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 11.02.2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முற்பகல் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -4 (புசழரி -ஐஏ)-ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள், திருநெல்வேலி மாவட்டத்தில் 1) திருநெல்வேலி, 2) ஆலங்குளம் 3) அம்பாசமுத்திரம், 4) நாங்குநேரி 5) பாளையங்கோட்டை 6)இராதாபுரம் 7)சங்கரன்கோவில் 8)செங்கோட்டை 9) சிவகிரி 10) தென்காசி, 11) வள்ளியூர் 12) வீரகேரளம்புதூர் 13) சேரன்மகாதேவி 14) கடையநல்லூர் 15)மானூர் 16) திருவேங்கடம் ஆகிய 16 தேர்வு மையங்களில், 322 கல்வி நிலையங்களில் (371 ர்யடடள) நடைபெறவுள்ளது.  மேற்படி தேர்வினை 1,03,629 நபர்கள் எழுத உள்ளார்கள்.  இத்தேர்வினை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் 23 பறக்கும்படை அலுவலர்களும்;, வட்டாட்சியர் ஃ துணை வட்டாட்சியர் நிலையில் 63 சுற்றுக்குழு அலுவலர்களும், உதவியாளர் நிலையில் 371 ஆய்வுப்பணி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  தேர்வு மையங்களில் தேர்வினை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் தங்களின் தேர்வு மையங்களை கண்டறிந்து முன்கூட்டியே தேர்வு எழுத வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  மேலும், தேர்வு அறையினுள் செல்போன்களை எடுத்துச் செல்லக்கூடாது.  தேர்வு எழுதுபவர்கள் தவிர இதர நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு சிறப்பாக நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கலெக்டர் சந்தீப் நந்தூரி  தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம்,  சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ப.ஆகாஷ் கோட்டாட்சித் தலைவர்கள் (திருநெல்வேலி) மைதிலி, (தென்காசி) ராஜேந்திரன், தமிழ்நாடு தேர்வாணைய பிரிவு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், உதவி பிரிவு அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து