எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் , மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் வளாகத்தில்; கொடியசைத்து துவக்கி வைத்தார்.இப்பேரணியை துவக்கி வைத்து கலெக்டர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
விழிப்புணர்வு பேரணி
பொதுமக்கள் மது மற்றும் கள்ளசாரயம் அருந்துவதினால் நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு விளைவிக்கும், உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு, இருதயம் பலவீனமாக்கப்படும். கண் பார்வை, கை,கால் வலிப்பு, நரம்பு மண்டலத்தை தாக்கி, சோர்வடைய செய்யும். கல்லீரல் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு ஏற்படும், இதனால் திடீர் மரணமும் ஏற்படும். ஒரு மனிதனை நோயாளியாக ஆக்குவது மட்டுமல்லாமல், தற்கொலைக்கும் இது தூண்டப்படுகிறது.உற்றார், உறவினர்களிடத்தில் கெட்ட பெயர் ஏற்படும், அவர்களுடைய வெறுப்புக்கு ஆளாக்கப்படுகிறது, குடும்பத்தில் மனைவி மற்றும் மக்களிடத்தில் அவப்பெயர் ஏற்படுத்துவது மட்டுமில்லாது, குடும்பம் முன்னேற்றத்தையே பாதிக்கும். இதுபோன்ற பல தீமைகளிடமிருந்து மது அருந்தும் பொதுமக்கள் விடுபட்டு, நாமும் மது அருந்தாமல், மற்றவர்களை போன்று வாழ்வில் அனைத்து நிலைகளிலும் உயர்ந்து, முன்னேறிட வேண்டும். இதன் மூலம் வீட்டிற்கும், நாட்டிற்கும் வளமை சேர்ப்போம் என கலெக்டர் பேசினார்.முன்னதாக, கலெக்டர் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள், காவல்துறை மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழிப்புணர்வு பேரணி கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி சேதுலெட்சுமிபாய் அரசு மேல்நிலைப்பள்ளியில் சென்று முடிவடைந்தது.இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ராஹ_ல்நாத் மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ, உதவி ஆணையர் (கலால்) ஏ. காளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |