அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு பணிகளை சிறப்பாக செய்த 54 பொது சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் : கலெக்டர் க.லட்சுமி பிரியா, வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      அரியலூர்
pro Ariyalur

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பொது சுகாதாரத்துறையின் சார்பில் காய்ச்சல் தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்ட பொது சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா,   நேற்று (13.02.2018) வழங்கினார்.

பாராட்டு சான்றிதழ்

 அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஜூன் 2017 முதல் டிசம்பர் 2017 வரை டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளை சிறப்பாக செய்தமைக்காக பொது சுகாதாரத்துறைச் சார்ந்த சுகாதார ஆய்வாளர்கள் 44 பேருக்கும், பூச்சியியல் வல்லுநர்கள், நுண்ணுயிர் வல்லுநர்கள் 4 பேருக்கும், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் 6 பேருக்கும் என 54 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர்  வழங்கினார்கள்.  பின்னர், சுகாதாரத்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பொதுமக்களின் நலனுக்காக தங்களது பணிகளை அர்ப்பணிப்புடனும், ஈடுபாட்டுடனும் செய்திட வேண்டும்கலெக்டர்                க.லட்சுமி பிரியா,   தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.வீ.சி.ஹேமசந்த்காந்தி, வட்டார மருத்துவ அலுவலர்கள் மரு.உமாமகேஸ்வரி (கடுகூர்), மரு.மணிவண்ணன் (திருமானூர்), மரு.மேகநாதன் (செந்துறை), மரு.கண்ணன் (ஆண்டிமடம்), மரு.தட்சனாமூர்த்தி (தா.பழூர்), மரு.லட்சுமிதரன் (ஜெயங்கொண்டம்), வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பூச்சியியல் வல்லுநர்கள் மற்றும் நுண்ணுயிர் வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து