வல்லம் பேரூராட்சியில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி : கலெக்டர் ஆ.அண்ணாதுரை துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      தஞ்சாவூர்
pro thanjai

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பேரூராட்சி மேட்டுத்தெருவில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழாவினை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, கொடியசைத்து (14.02.2018) துவக்கி வைத்தார்.
 ஜல்லிக்கட்டு
 முன்னதாக காளை பிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு உறுதிமொழியினை ஏற்று ஜல்லிகட்டு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, முன்னிலையில் உறுதி மொழியினை ஏற்றனர். தமிழர்களின் பாரம்பரியான விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாவில் 546 காளைகள், பதிவு செய்யப்பட்டதில் ஜல்லிக்கட்டு காளையினை முறையாக கால்நடைத்துறை மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியுடைய காளைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 36 காளைகள் தகுதியின்மையில் காரணமாக நிராகரிக்கப்பட்டது. கால்நடைத்துறையின் மூலம் காளைகளுக்கு தனியாக ஆம்புலென்ஸ் வசதி தயார் நிலையில் இருந்தது.
250 காளை பிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். வீரர்களுக்கு மருத்துவத் துறையின் மூலம் முறையான பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். 31 வீரர்கள் தகுதியின்மை காரணமாக நிராகரிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 3 காளைகளுக்கு காயமும், 8 மாடு பிடி வீரர்களுக்கு லேசான காயமும் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாதுகாப்பு பணிகளில் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். மேலும், உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலின்படி அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து காளை மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. கால்நடைத் துறை இணை இயக்குநர் அவர்களின் தலைமையில் ஒரு துணை இயக்குநர், 6 உதவி இயக்குநர்கள்;, 12 கால்நடை மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் காளைகள் பரிசோதனை மேற்கொண்டனர்.
 
மருத்துவ சிகிச்சை
சுகாதாரத்துறையின் சார்பில் சுகாதாரபணிகள் துணை இயக்குநர் தலைமையில் 12 குழுக்களில் 12 மருத்துவர்கள், 12 செவிலியர் மற்றும் 15 உதவியாளர்கள் கலந்து கொண்டு மாடி பிடி வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் மருத்துவ சிகிச்சை அளித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், கால்நடைத்துறையின் இணை இயக்குநர் மாசிலாமணி, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் சுப்ரமணியன், வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் விழாக்குழுவினர் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து