முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி மாவட்ட தொழில்மையம், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்  இணைந்து நடத்தும்  ‘தொழில் முனைவோர்  வாரம்”  விழிப்புணர்வு கருத்தரங்கம் கலெக்டர்   சஜ்ஜன்சிங் ரா.சவான்    துவக்கி வைத்தார்.தொழில் முனைவோர் வாரம் மற்றும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கினை துவக்கி வைத்து கலெக்டர்   பேசியதாவது:-   

கருத்தரங்கம்

 இங்கு நடைபெறும் இக்கருத்தரங்கில் தொழில் முனைபவர்களுக்கான புதிய திட்டங்கள் குறித்தும், திட்டத்தில் பயன்பெற  வேண்டிய தகுதிகள் குறித்தும், சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்தும், திட்டங்களின் நடைமுறைகள் குறித்தும், இங்கு வரப்பெற்ற அலுவலர்கள் விளக்கவுரையாற்றுவார்கள். இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தொழில் முனைவோர்கள் அதிக அளவில்  பயனடையும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும், மாவட்ட தொழில் மைய அலுவலகத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் தொழில் முனைவோருக்கான மானியத்துடன் கூடிய பல்வேறு கடன் திட்டங்கள் மற்றும் அனைத்து வகையான மானியங்கள் குறித்து தொழில் முனைவோர்கள் அறிந்து கொள்ள வேண்டும். சமுதாய மற்றும் பொருளாதார ரீதியில் நலிவுற்று பின்தங்கிய குறிப்பாக படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிகடன் உதவிபெற வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்ட்டு வருகிறது. இந்நிதியாண்டிற்கான இலக்கீடு 75.00 லட்சத்திலிருந்து 90.00 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் இணையதளத்திலும், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் இணையதளத்திலும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் பதிவு செய்ய வேண்டும் என்றார்.            இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கே.மாரிமுத்து, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.விஸ்வநாதன்   டீ.மணிகண்டன் துணை இயக்குநர், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (சென்னை), ஆ.கோவிந்தராஜ், உதவி இயக்குநர் (திருநெல்வேலி), எம்.கோபாலன்,தலைவர்  தொழில் நுட்ப வல்லுநர்கள், அரசு அலுவலர்கள் மற்றும்  வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து