முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரத்தில் மாசி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்.

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்,-     ராமேசுவரத்தில் மாசி அமாவாசையை நாளான நேற்று அதிகாலையில்  ஏராளமான பக்தர்கள் அக்னிதீர்த்தக்கடலில்  புனித நீராடி  திருக்கோயிலில் சுவாமி,அம்மன் சன்னதியில் நடைபெற்ற
சிறப்பு வழிபாடுகளில்  கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

உலக புகழ்பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மாசி மாத  அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்காண பக்தர்கள் நேற்று  குவிந்தனர்.சிவஸ்தலம் அமைந்த புண்ணிய பூமியில் பக்தர்கள்  அதிகாலையில் அக்னிதீர்த்தக்கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனபூஜைகள்,தோஷங்கள் அடங்கிய பூஜைகள் செய்து பின்னர் திருக்கோயிலுள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடினர்.சுவாமி அம்மன் சன்னதியில்  பல மணி நேரம் காத்திருந்து  தரிசனம் செய்தனர்.அதனை தொடர்ந்து சுவாமி,அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகள்,அபிஷேகங்கள்,தீபாரதணை வழிபாடுகள் நடைபெற்றது. திருக்கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களின் வசதிகளுக்காக குடிநீர் வசதி,பாதுகாப்பு உள்பட அனைத்து முன் ஏற்பாடுகளையும் திருக்கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி உத்தரவின் திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
   ராமேஸ்வரம் அக்னி தீர்த்தகடலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பண செய்து சிறப்பு வழிபாடு.
  இந்துக்கள், மறைந்த தங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு அமாவாசை தினங்களில் சிறப்பு தர்ப்பணங்கள் செய்து வழிபாடு செய்வது வழக்கம். இதில் தை, ஆடி, புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில், நாட்டில் உள்ள புனித தலங்களில் உள்ள நீர்நிலைகளில் நீராடி, தர்ப்பணம் கொடுப்பதைப் பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று, நாடு முழுவதும் மாசி அமாவாசைக் கடைப்பிடிக்கப்படுகிறது.
  சேலம் மாவட்டம் மேட்டூர், காவேரிபுரம், மேச்சேரி, லக்கம்பட்டி,கோவிந்தபுரம், சேத்துக்குழி, வெள்ளத்தூர் பகுதிகளிலிருந்து வீரகார குடும்ப வகையறாக்களைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்டவர்கள், மாசி அமாவாசை தினமான இன்று, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில், மறைந்த தங்கள் முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் நினைவாகக் கன்னியவர்ஷணவர்த்தி, நாகதோஷவர்த்தி, பிதர்ஷண வர்த்தி ஆகிய தோஷங்கள் நீங்க தர்ப்பணம் செய்தனர். இதற்கென குருசாமி என்பவரின் தலைமையில் சேலத்திலிருந்து 7 பேருந்துகளில் ராமேஸ்வரம் வந்திருந்தனர்.இவர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கரையில், இவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு ஒரே நேரத்தில் தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர், அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடி, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
 இந்த் தர்ப்பணம் கொடுத்ததன் மூலம் தங்கள் குடும்பத்தில் நிலவிவரும் திருமணத் தடை, குழந்தை இன்மை, துர்மரணங்கள் போன்றவை விலகுவதுடன், நினைத்த காரியங்கள் கைகூட, மறைந்த தங்கள் முன்னோர்கள் ஆசீர்வதிப்பார்கள் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த விசேஷ பரிகார தர்ப்பணத்தில் ஒரே வகையறாவைச் சேர்ந்தவர்கள், ஒட்டு மொத்தமாகப் பங்கேற்றதாக தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து