ஓசூர் காவேரி மருத்துவமனையில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக இருதய அறுவை சிகிச்சை இரண்டு குழந்தைகளுக்கு இலவசமாக செய்யப்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனை ஓசூரில் 24 மணி நேர தீவிர இருதய பிரச்சனைகளுக்கும் முழுமையான சிகிச்சை அளித்து வருகின்றது. பிறவி குறைபாடுள்ள இரண்டு குழந்தைகளுக்கு சையது அமீன்கான் (4) மற்றும் சௌந்தர்யா (8) இவர்களுக்கு மிகவும் அரிதான இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இலவச அறுவைசிகிச்சை
அறுவை சிகிச்சையை காவேரி மருத்துவமனையின் இருதய நலப் பிரிவு மருத்துவர்கள் ஆண்டோச காயராஜ், சுகுமார், பிரவீன், யுவராஜ் .பிரசன்னா, கார்த்திகேயன் ஆகியோர் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். இதில் குழந்தைகள் மிக நலமாக உள்ளனர். ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கான செலவு குறைந்தது 1.5 லட்சம் செலவாகும். தற்போது இரண்டு குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கான செலவு 3 லட்சம் நேற்று இரண்டு குழந்தைகளுக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த செலவு முழுவதையும் சேவை நோக்கோடு காவேரி மருத்துவமனை இலவசமாக செய்துள்ளது.இது போன்ற அறிய வகை சிகிச்சையினை கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தை சுற்றியுள்ள 100 கி மீ சுற்றளவில் உள்ள எந்த மருத்துவமனையிலும் செய்யவில்லை. அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் தரமான தீவிர இருதய சிகிச்சை ஓ சூரிலேயே காவேரி மருத்துவமனையால் செய்யப்படுகிறது.