பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குழுவின் பயிற்சிமுகாம்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      திருவள்ளூர்
P neri

 

திருவள்ளுர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குழுவின் பயிற்சிமுகாம் நடைப்பெற்றது.

தேசிய பேரிடர் மேலாண்மை

 கோட்டைக்குப்பம் செயின்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ,மாணவியர்கள் முன்னிலையில் நடைப்பெற்ற இந்த முகாமில் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குழுவினர் தீவிபத்து,பூகம்பம்,புயல்,மழை,வெள்ளம் போன்ற பேரிடர்களிலிருந்து காத்துக்கொள்வது எப்படி,விபத்து ஏற்பட்டால் முதலுதவி செய்வது எப்படி என்பது பற்றி விளக்கம் அளித்து மாணாக்கர்ளுக்கு செய்முறை பயிற்சியும் அளித்தனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குழு அரக்கோணம் 4 வது கமாண்டர் .கே.அமர்,பொன்னேரி வட்டாட்சியர் சுமதி,திருவொற்றியூர் நத்தம் வட்டாட்சியர் செந்தில்நாதன்,பொன்னேரி மண்டல துணை வட்டாட்சியர் சீனிவாசன்,வருவாய் ஆய்வாளர்கள் திருப்பாலைவனம் இதயதுல்லா,கோளூர் கண்ணன்,கிராம நிர்வாக அலுவலர்கள் பழவேற்காடு செந்தில்,பாக்கம் தேவநாதன்,பிரளயம்பாக்கம் தினேஷ்,திருப்பாலைவனம் ராஜலட்சுமி,வஞ்சிவாக்கம் ஜானகி,மெதூர் விக்னேஷ்,பெரும்பேடு நவீன் மற்றும் கிராம உதவியாளர்கள்,பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து