முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்: மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி பார்வையிட்டு ஆய்வு

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      திருவள்ளூர்
Image Unavailable

திருவள்ளுர் மாவட்டம் மற்றும் வட்டம், மோவூர் ஊராட்சியில் கோமாரி (கால் மற்றும் வாய்) நோய்;த் தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தொடங்கி வைத்தார்.

 கோமாரி நோயானது பசு மற்றும் எருமைகளைத் தாக்கும் வைரஸ் நோயாகும். இந்நோயினால் மாடுகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு கால் மற்றும் வாயில் கொப்புளங்களும், மடி காம்புகளில் புண்ணும் உருவாகும். கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறையும், சினை மாடுகளில் சில சமயம் கருச்சிதைவு எற்படும். நோயால் பாதித்த கறவை மாடுகளில் பால் குடிக்கும் கன்றுகள் இறக்க நேரிடும். எனவே, கோமாரி நோயைத் தடுப்பதற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாடுகளுக்குத் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

கால்நடை மருத்துவக் குழு

திருவள்ளுர் மாவட்டத்தில் இதுவரை 13 சுற்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. தற்போது கால்நடை பராமரிப்புத் துறையினரால் 14-வது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் 01.03.2018 முதல் 21.03.2018 முடியவுள்ள காலத்தில் நடத்தப்படவுள்ளது. இக்காலத்திற்குப் பிறகும் தடுப்பூசி போடப்படாமல் விடுபட்ட கால்நடைகளுக்கு 22.03.2018 முதல் 31.03.2018 வரையிலான காலத்தில் தடுப்பூசி போடப்படும். திருவள்ளுர் மாவட்டத்தில் 84 கால்நடை மருந்தகங்கள், 25 கால்நடை கிளை நிலையங்கள், 5 கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. 73 கால்நடை மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

2,25,028 பசுக்கள், 55,322 எருமையினங்கள் ஆக மொத்தம் 2,80,350 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்படவுள்ளது.கால்நடை மருத்துவக் குழுவினர் அனைத்து கிராமங்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு வருகை தர உள்ளனர். அச்சமயத்தில், விவசாயிகள் தங்களது பசு மற்றும் எருமை மாடுகளுக்குத் தடுப்பூசி போட்டு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.எம்.கனியப்பன், உதவி இயக்குநர் மரு.எஸ்.இராமச்சந்திரன்,ஸ்ரீதரன்பாபு,வட்டாட்சியர் தமிழ்செல்வன்,கால்நடை மருத்துவர் மரு.வெங்கட்ரமணன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள்,ஊராட்சி கழக செயலாளர் பரமகுரு உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து