கடலூர் மாவட்டத்தில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனகம் கலெக்டர் தண்டபானி வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2018      கடலூர்
cuddalure collector issue the amma two wheeler scheme

கடலூர்மாவட்டம் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனத்தினை பயனாளிகளுக்கு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர்  கே. ஏ. பாண்டியன்  முன்னிலையில் கலெக்டர்  வே.ப. தண்டபானி வழங்கினார்

அம்மா இருசக்கர வாகன திட்டம்

இவ்விழாவில் கலெக்டர்  வே.ப. தண்டபானி,   தெரிவித்ததாவது. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய சிந்தனைத் திட்டமான உழைக்கும் மகளிருக்கு மான்ய விலையில் ‘அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா” தொடக்கம் இன்று ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் தங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகப் போராடி வரும் உழைக்கும் மகளிர் வெகுதூரம் நடந்து சென்றும், பேருந்துகளில் சென்றும் பணிக்குச் செல்வதில் உள்ள இன்னல்களை போக்க வேண்டிய உயர் நோக்குடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள, ஆண்டு வருமானம் ரூ. 2.50 இலட்சத்திற்குட்பட்டு ஊதியம் ஈட்டும் உழைக்கும் மகளிருக்கு உரியது இத்திட்டம்.இவ்வுன்னதமான திட்டத்தின் கீழ் உழைக்கும் மகளிர் வேலைக்குச் செல்லும் பயணத் தொலைவை எளிதில் அடையவும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பணிக்கு சென்றடையவும் மற்றும் தாமாக உற்பத்தி செய்த பொருட்களை வெளி இடங்களுக்குச் சென்று விற்று வாழ்வாதார மேம்பாடு அடையவும், 50மூ அல்லது ரூ. 25,000- இவற்றில் எது குறைவோ அதற்கான மான்யத்துடன் அம்மா இருசக்கர வாகனங்கள் 2017-18 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.கடலூர் மாவட்டத்திற்கு, இந்த ஆண்டு 3705 உழைக்கும் மகளிருக்கு இத்திட்டத்தின் கீழ் மான்யத்துடன் அம்மா இருசக்கர வாகனங்களுக்கான ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் 2552 மகளிரும், நகர்ப்புறப் பகுதிகளில் 1153 மகளிரும் நடப்பாண்டில் பயன் பெறவுள்ளனர். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த 815 மகளிர் பயன்பெறுவார்கள். மாற்றுத் திறனாளிகள் 4மூ மகளிர் பயன் பெறும் வகையில் திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 22.01.2018 முதல் 10.02.2018 முடிய இத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 10514 மகளிர், மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் கோரி விண்ணப்பித்துள்ளனர். அனைத்து விண்ணப்பங்களும்  அதற்கென நியமிக்கப்பட்ட அலுவலர்களால் உரிய வகையில் கள சரிபார்ப்பு செய்யப்பட்டு வருகின்றன.பாரத பிரதமர் மற்றும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 24.02.2018 அன்று சென்னையில் இத்திட்ட தொடக்க விழா நடைபெற்றதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் தொடக்க விழா நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றன.கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் தொடக்க விழா இங்கு இனிதாக நடைபெற்று வருவதில் மகிழ்வடைகிறேன். இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 110 பயனாளிகள் மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுள் இப்பகுதியைச் சார்ந்த 48 உழைக்கும் மகளிருக்கு இன்று மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்குவதில் பெருமகிழ்வு கொள்வதுடன் அத்தனை பயனாளிகளும் தங்கள் வாழ்வில் மென்மேலும் வாழ்வாதார மேம்பாடு காண வாழ்த்துகிறேன்.இவ்வாகனத்தை பயனாளிகள் மூன்று ஆண்டுகளுக்கு பிற நபரிடம் விற்கவோ அல்லது உரிமை மாற்றம் செய்யவோ இயலாது. இன்று வழங்கப்படும் இவ்வாகனம் உங்களுக்கானது. அரசின் உதவியுடன் வழங்கப்பட்டது இவ்வாகனம் என்பதை பயனாளிகள் எண்ணி செயல்பட வேண்டும்.கடலூர் மாவட்டத்திற்கு நடப்பாண்டில் வழங்கியுள்ள ஒதுக்கீட்டில் எஞ்சியுள்ள 3595 பயனாளிகளும் மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவின் ஒப்புதலுடன் விரைவில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கும் மான்ய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படவுள்ளன என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.இத்திட்ட பயனாளிகள், அரசின் இந்த சிறப்பு சலுகையினால் பெற்றுள்ள வாகனங்களைக் கொண்டு பயணத்தை எளிமையாக்கி கொள்ளவும், உழைப்பை மேம்படுத்தி வாழ்வில் உயரிய பொருளாதார நிலையை அடைந்திடவும் என் சார்பிலும், இங்கு வந்து வாழ்த்தியோர் அனைவரின் சார்பிலும் மீண்டும் வாழ்த்துகிறேன் என தெரிவித்தார். இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று மகளிர் திட்ட இணை இயக்குநர்  திட்ட இயக்குநர்  இரா. இராஜசேகர்  வரவுற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர்  திட்ட இயக்குநர்  பெ. ஆனந்ராஜ், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  வை. ரவிச்சந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஆறுமுகம், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள்  ஜெ.விஜயகுமார்,  கே. இராஜ்குமார்,  எஸ். இரமேஷ்பாபு,  டி. சத்தியமூர்த்தி, சிதம்பரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு)  ஜெகதீசன், புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர்  திருஞானசம்மந்தம், காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி செயல் அலுவலர்         ராம்குமார், புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ)  விமலா, கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)  செல்வராஜ், குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)   சுகுமார் மகளிர் திட்ட பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவின் இறுதியில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்  சு. ஆறுமுகம்  நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து