முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கோட்டை – சென்னைக்கு ரூ.200 கட்டணத்தில் அந்தியோதயா சிறப்பு ரயில் இயக்கம்

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      திருநெல்வேலி

செங்கோட்யிலிருந்து சென்னை தாம்பரத்திற்கு ரூ. 200 கட்டணத்தில் பயணம் செய்யும் வகையில் முன்பதிவு இல்லாத அந்தியோதயா சிறப்பு ரயில் சேவை துவங்கியது.

சிறப்பு ரயில் சேவை

இந்த ஆண்டு மத்திய அரசு ரயில்வே பட்ஜெட்டில் செங்கோட்டை – தாம்பரம் இடையே முன்பதிவு பெட்டிகள் இல்லாத அந்தியோதயா சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள ரயில் பெட்டிகளின் பற்றாக்குறை காரணமாக ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அந்தியோதயா ரயிலை சிறப்பு ரயிலாக இயக்கிட தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி அந்தியோதயா சிறப்பு ரயில் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். செவ்வாய் மற்றும் வியாழக்கழமைகளில் காலை 6 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயில் இரவு 10.30 மணிக்கு சென்னை தாம்பரத்தை சென்றடையும், அந்தியோதயா சிறப்பு ரயில் 5ம் தேதி காலை 7 மணிக்கு சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையத்தை வந்து சேர்ந்தது. ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ரயிலில் செங்கோட்டையிலிருந்து சென்னை தாம்பரத்திற்கு பயணம் செய்ய கட்டணமாக ரூ. 200 மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்று (6ம் தேதி) காலை 6 மணிக்கு செங்கோட்டையில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு அந்தியோதயா சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது.  தமிழகத்தில் பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தனியார் ஆம்னி பஸ்கள் செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் இருந்து சென்னைக்கு செல்ல ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக கட்டணம் வசூலிக்கும் நிலையில் இந்த ரயிலில் கட்டணமாக ரூ. 200 மட்டுமே வசூலிக்க படுவதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் இந்த ரயிலில் பயணம் செய்கிறார்கள்.

மேலும் இந்த ரயில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் புறப்பட்டு தென்காசி, கடையநல்லூர், பாம்புக்கோயில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய வழியாக செல்வதாலும் மேற்படி ரயில் நிலையங்களில் நின்று செல்வதாலும் இந்த ரயில் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுவதோடு பயணிகளின் கூட்டமும் அதிகமாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து