முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினத்தில் 11-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை மாவட்ட வருவாய் அலுவலர் வ.முருகேசன் பார்வையிட்டார்

புதன்கிழமை, 7 மார்ச் 2018      நாகப்பட்டினம்
Image Unavailable

 

நாகப்பட்டினம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் வ.முருகேசன் நேற்று (07.03.2018) நேரில் பார்வையிட்டார்.

நேரில் ஆய்வு

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர்; தெரிவித்ததாவது, "தமிழக அரசு 2017-18 ஆம் கல்வியாண்டில் இருந்து மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் மாநில அளவில் அரசுப்பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது . அதனடிப்படையில் முதன்முதலாக மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வெழுதும் மாணவர்களுக்கான தேர்வுகள் நேற்று முதல் துவங்கி 16.04.2018 முடிய நடைபெற உள்ளது. மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வுகள் காலை10.00 மணிமுதல் 12.45 மணி வரை நடைபெறும்.ஒரு பாடத்திற்கு 100 மதிப்பெண்கள் வீதம் 6 பாடத்திற்கு 600 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

அத்தேர்வினை நாகப்பட்டினம் மாவட்டத்தில் 8043 மாணவர்களும் 10332 மாணவிகளும் ஆக மொத்தம் 18374 பள்ளி தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் கல்வி மாவட்டத்தில் நாகப்பட்டினம் தேசிய மேல்நிலைப்பள்ளியில் 24 தனித்தேர்வர்களும் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 தனித்தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர். நாகப்படடினம் கல்வி மாவட்டத்தில் 65 பள்ளிகளிலிருந்து 30 மையங்களிலும்இ மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் 72 பள்ளிகளிலிருந்து 31 மையங்களிலும் தேர்வு எழுத உள்ளார்கள்.

மேலும் வினாத்தாள் எடுத்துசெல்வதற்கும் விடைத்தாள்களை திரும்ப எடுத்து வருவதற்கும் நாகப்பட்டினம் கல்வி மாவட்டத்தில் 7 வழித்தடங்களும் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் 7 வழித்தடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேல்நிலை முதலாம்; ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் பணியில் தலைமையாசிரியர்கள் பணி நிலையில் 80 நபர்களும், ஆசிரியர்கள் பணி நிலையில் 1051 நபர்களும், அலுவலக பணியாளர்கள் நிலையில் 280 நபர்களும் 156 காவல் துறை சார்பான காவலர்களும் ஆக மொத்தம் 1567 நபர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்வு பணிகளை கண்காணிப்பதற்காக 64 நிலையான படைகளும் 18 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன என்றார். நாகப்பட்டினம் மாவட்டத்தின் தேர்வுப் பணி கண்காணிப்பாளராக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) எஸ்.சுகன்யா நியமிக்கப்பட்டு தேர்வுப் பணி தொடர்பான அனைத்து கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது முதன்மைக் கல்வி அலுவலர் கஸ்தூரிபாய், வட்டாட்சியர் இராகவன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து