எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
குறைந்த காலத்தில், அதிக வருமானம் தரும் மர வகைகளில் முக்கிய இடத்தில் இருப்பது குமிழ் மரம். இதை சாகுபடி செய்ய ஏக்கர் கணக்கில் இடம் தேவையில்லை. வரப்பு, வாய்க்கால், காலி இடம் என கைவசம் இருக்கும் எந்த இடத்திலும் நடலாம்.
இது, ஆணிவேர் தாவரம் என்பதால், பக்கவேர்கள் அதிகமாக வளராது. அதனால் குறைந்த இடைவெளியிலும் இந்த மரத்தை நடவு செய்யலாம். தேக்குக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மரம், இழைப்பதற்கு இலகுவாகவும், அதேசமயம் உறுதியாகவும் உள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக குமிழ் மரத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக விற்பனையில் வீறுநடை போடுகிறது இம்மரம்! குமிழ் மரத்தை வணிகரீதியாக எப்படி சாகுபடி செய்வது?
மறுதாம்பிலும் வருமானம் : குமிழ், நல்ல வடிகால் வசதியுள்ள ஆழமான மண்கண்டமுள்ள அனைத்து மண் வகைகளிலும் சிறப்பாக வளரும். சாகுபடி நிலத்தை உழவு செய்து 15 அடிக்கு, 15 அடி இடைவெளியில், இரண்டு அடி நீள, அகல, ஆழமுள்ள குழியெடுத்து, நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழியிலும் மட்கிய தொழு உரம் மற்றும் வண்டல் மண்ணைக் கலந்து முக்கால் பாகத்துக்கு நிரப்பி, மீதமுள்ள குழியை மேல் மண் கொண்டு நிரப்ப வேண்டும். ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவைப்படும். மூன்று மாதம் வரை வாரம் ஒரு முறையும்; பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும் என நீர்பாய்ச்சுவது நல்லது.
நடவு செய்த ஓராண்டில், 10 அடி உயரம் வரை வளர்ந்து விடும். முதல் மூன்று ஆண்டுகள் வரை கிளைகளை அவ்வப்போது கவாத்து செய்ய வேண்டும். முறையாக கவாத்து செய்யாவிட்டால், மரம் நேராக வளராது. நடவு செய்த 8 முதல் 10-ம் ஆண்டுக்குள் அறுவடை செய்யலாம். 10 ஆண்டுகளில் ஒரு மரம் ஒரு டன் எடையில் இருக்கும். ஒரு டன் குறைந்தபட்சம் 7,000 ரூபாய்க்கு விற்பனையாவதாக வைத்துக்கொண்டாலும், ஒரு ஏக்கரில் உள்ள 200 மரங்கள் மூலம் 14 லட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்.
அறுவடை செய்த இடங்களில், மறுபடியும் துளிர்க்கும். அதை முறையாகப் பராமரித்தால் அடுத்த 6 அல்லது 7-ம் ஆண்டு மறுதாம்பை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையில் கிடைத்ததில், 50 சதவிகித அளவு வரையில் இந்தத்தடவை மகசூல் கிடைக்கும். இதற்குப் பிறகு, மறுதாம்பு விடக்கூடாது. இது வனத்துறை பரிந்துரை செய்யும் சாகுபடி முறையாகும்.
சில விவசாயிகள் 10 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 400 கன்றுகளைக்கூட நடுகிறார்கள். இந்த முறையில் சாகுபடி செய்யும் போது, 5-ம் ஆண்டில் ஒரு மரம் விட்டு, ஒரு மரம் என்று அறுவடை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் 200 மரங்கள் கிடைக்கும். இதை விற்பனை செய்தால் தலா 1,500 ரூபாய் வீதம் 3,00,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். மீதமுள்ள 200 மரங்களை 10-ம் ஆண்டில் அறுவடை செய்யலாம். ஒரு மரம் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் வீதம் 200 மரங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்.
கிரிக்கெட் மட்டைக்கு குமிழ் : குமிழ் மரத்தின் தாவரவியல் பெயர் மெலைனா ஆர்போரியா. இதன் தாயகம் இந்தியா. தீப்பெட்டி, தீக்குச்சி, பிளைவுட், பென்சில், கிரிக்கெட் மட்டை, ஜன்னல், கதவு நிலைகள், கைவினைப் பொருட்கள், மரச்சாமன்கள் என பலவாறாக பயன்படுகிறது குமிழ். இதைத் தனிப்பயிராக சாகுபடி செய்ய வாய்ப்பில்லாத விவசாயிகள், வரப்பு, வாய்க்கால், வேலி ஓரங்கள், ஓடை, காலி இடங்கள் என கைவசம் இருக்கும் இடமெல்லாம் நடவு செய்யலாம். குமிழ் சாகுபடியைப் பொறுத்தவரை கவாத்தும், பாசனம் மட்டும்தான் பராமரிப்பு, இதைச் சரியாக செய்யாவிட்டால் எதிர்பார்க்கும் மகசூல் கிடைக்காது.
அவ்வப்போது கம்பளிப்புழு தாக்குதல் இருக்கும், அது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது. பாதிப்பு அதிகமாக இருக்கும் என தோன்றினால், மூலிகைப் பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம். இதுவரை நாம் பேசிக்கொண்டு இருந்தது குறைந்தபட்ச கணக்கு. இனி, குமிழ் சாகுபடியில் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், அன்னவயல் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சொல்வதைக் கேட்போம்.
மூணு வருஷம்தான் பராமரிப்பு : ‘‘என்னைப் பொறுத்தவரைக்கும் குமிழ் மாதிரி குறைஞ்ச காலத்துல அதிக வருமானம் கொடுக்குற மரம் எதுவும் இல்லீங்க. 7 முதல் 10 வருஷத்துக்குள்ள ஒரு மரம் ஒரு டன் எடை வந்துடுது. 10 வருஷத்துக்கு முன்ன 30 சென்ட் நிலத்துல 9 அடிக்கு 9 அடி இடைவெளியில குமிழை நடவு செஞ்சிருந்தேன். கவாத்து அடிச்சு, முறையா தண்ணி கொடுத்து பாத்துகிட்டதால மரங்க நல்லா வளந்திருக்கு. அதுல வேலியோரமா இருந்த நாலஞ்சு மரங்களை போன வருஷம் வெட்டி வித்தேன். ஒவ்வொரு மரமும் ஒன்றரை டன் எடை இருந்துச்சு. ஒரு டன் 10 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனதால, மரத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. மிச்ச மரங்களை இன்னும் வெட்டாம வெச்சிருக்கேன்.
இந்த மரத்துக்கு இருக்குற டிமாண்டை பாத்துட்டு ஒண்ணரை வருஷத்துக்கு முன்ன, செடிக்கு செடி 14 அடி, வரிசைக்கு வரிசை 13 அடி இடைவெளியில ரெண்டரை ஏக்கர்ல நடவு செஞ்சு இருக்கேன். இப்படி நட்டால் ஏக்கருக்கு 220 கன்றுகள் வரைக்கும் தேவைப்படும். முதல் வருஷம் வரைக்கும் ஊடுபயிரா கடலை, உளுந்துனு மாறி, மாறி ஊடுபயிர் செஞ்சுக்கலாம்.
குமிழைப் பொறுத்தவரைக்கும் 20 அடி உசரத்துக்கு மரம் போற வரைக்கும் கவாத்து எடுக்கணும். அதுக்கு மேல தேவையில்லை. அதேபோல முதல் ரெண்டு, மூணு வருஷம் வரைக்கும் முறையா தண்ணி கொடுத்து பராமரிக்கணும். இதையெல்லாம் செஞ்சுட்டால் குமிழ்ல நல்ல மகசூலை எடுத்துடலாம். நடவு செஞ்ச 7-ம் வருஷத்துல இருந்து 10-ம் வருஷத்துக்குள்ள அறுவடை செஞ்சுடலாம்.
ஒரு மரத்துக்கு சராசரி விலையா 10 ஆயிரம் கிடைச்சாலும், ஒரு ஏக்கர்ல 200 மரத்துக்கு, 20 லட்சம் ரூபாய் வருமானமா கிடைக்கும். விற்பனையிலயும் பிரச்னையில்ல. உங்ககிட்ட குமிழ் மரம் இருக்கறது தெரிஞ்சா, உள்ளூர் வியாபாரிகளே வந்து பணம் கொடுத்து வெட்டிக்கிட்டு போயிடுவாங்க. அந்தளவுக்கு இதுக்கு டிமாண்ட் இருக்கு. இம்மரம் வெர்பனேசி என்ற தேக்கு மரக் குடும்பத்தைச் சார்ந்தது. மெலினா ஆர்போரியா என்பது இதன் தாவரவியல் பெயராகும்.
குமிழ் மரமானது கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் வரை இந்தியாவின் எல்லா இடங்களிலும் இயற்கையாக வளரக்கூடிய ஒரு இலையுதிர் மரம் ஆகும். இந்த மரம் அதிகபட்சம் 30 மீட்டர் உயரம் வரை வளரும். இம் மரத்தின் விட்டம் 1,2 அடிமுதல் 4 அடி வரை இருக்கும். மரத்தின் உட்பகுதி லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது இந்தியாவை தாயகமாக கொண்ட மரமாகும்.
மேலும் இம்மரமானது மியான்மர், தாய்லாந்து, லாவோ, கம்போடியா,வியட்நாம், மற்றும் சீன தெற்குமாகாணங்களில்இயற்கை காடுகளில் காணப்படுகிறது. சியாரா,நைஜீரியா,மலேசியா ஆகிய நாடுகளில் அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது. களிமண் நிலத்தில் நன்றாக வளரும். தொடர்ந்து நீர்தேங்கும் நிலத்தில் வளராது. வரப்போரங்களிலும் வாய்க்கால் ஓரங்களிலும் நட்டு வளர்க்கலாம். ஏராளமானஇலைகளுடன் மரம் அழகாக இருக்கும்.
திறந்த வெளிகளில் காற்றுத்தடுப்பானாகவும் இம்மரத்தை வளர்க்கலாம். மரங்களிலிருந்து கீழே விழும் இலைகள் மட்கி அந்த நிலத்தை வளப்படுத்தும். வறட்சியை தாங்கும் இயல்புடையன. இம்மரமானது பட்டு புழுக்களுக்கு உணவாகவும்,கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. மூன்று ஆண்டுகளில் பூக்கத் தொடங்கும். ஆனால், முழுமையாக 6 ம் ஆண்டில் தான் முழுமையாக பூக்கும். குமிழ் மர பூக்களில் அதிக தேன் உள்ளதால் இம்மரத் தோப்புகளில் தேனீக்கள் வளர்த்து வேளாண் பெருங்குடி மக்கள் உபரி வருமானம் தொடர்ந்து பெறலாம்.
சாதாரண ஏழை எளிய மக்களும் கூட 10 குமிழ் தேக்கு மரங்களை நட்டு தங்களுடைய பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளலாம். ஏக்கருக்கு 6-க்கு 6 இடைவெளியில் 1200 மரங்கள் வரை வளர்க்கலாம். குமிழ் மரம் 1 டன் விலை ரூ.8500- ஆகும். 7-8 வருடத்தில் ஒரு மரமானது சிறப்பான பராமரிப்பு செய்தால் 1.5 டன் எடை குறையாமல் கிடைக்கும். குமிழ் மரத்தின் பயனானது தேக்கு மரம் எதற்கெல்லாம் பயன்படுகிறதோ, அதற்கெல்லாம் குமிழ் மரத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம், குமிழ் மரமும் தேக்குமரத்தின் ஒரு வகைதான். ஒரு டன் குமிழ் மரத்தில் 18 கன சதுர அடி பலகை கிடைக்கும். மற்றவகை தேக்குமரங்களில் மரங்களில் 12 கன சதுர அடி பலகை மட்டுமே கிடைக்கும்.
பலகைகள் லேசாக இருக்கும் ஆனால் உறுதியானவை. நீடித்து உழைக்கும். 25 முதல்30 ஆண்டுகள் விளைந்த தேக்கு மரத்தின் உறுதியை போன்று 7-8 ஆண்டுகள் விளைந்த குமிழ் மரத்தில் உறுதி தன்மை இருக்கும். குமிழ் மரம் மர வேலைப்பாடுகளுக்கு ஏற்ற சிறந்த மரமாக விளங்குகிறது. கைவினைப்பொருட்கள்,மரச்சாமான்கள், பர்னிச்சர்கள், தீப்பெட்டி, பிளைவுட்,பென்சில், கிரிக்கெட் மட்டை, ஜன்னல், கதவு நிலைகள், சோபா செட்டுகள்,சோகேஸ்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை கை,கால் தயாரிக்க பயன்படுகிறது. 15 வயது மரத்திலிருந்து ஒரு மாதத்தில் 10 கிலோ குமிழ் விதைகள் கிடைக்கும். ஒரு கிலோ எடையில் சராசரியாக 1000 குமிழ் விதைகள் இருக்கும். தற்போது ஒருகிலோ குமிழ் விதை ரூ.750-க்கு விற்கப்படுகிறது. ஆர்வமுள்ள வேளாண் பெருங்குடிமக்கள் குறைந்த பட்சம் 20 மரங்களை 15 ஆண்டுகள்வளர்த்தால் விதைகள் 200 கிலோ விதைகள்; கிடைக்கும். குமிழ் மரம் வளர்ப்பிற்கு மத்திய அரசு 50 சதவீத மானியம் வழங்குகிறது.
எஸ்.பாலமுருகன், சிவகங்கை
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க. எஃகு கோட்டையை தொட்டுக்கூட பார்க்க முடியாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
13 Sep 2025சென்னை : பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-09-2025.
13 Sep 2025 -
திண்டுக்கல் அருகே மின் கசிவு காரணமாக பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்
13 Sep 2025திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.
-
தங்கம் விலை சற்று சரிவு
13 Sep 2025சென்னை : உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வர
-
மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. - முதல்வர்
13 Sep 2025சென்னை : மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன்: பிரதமர் மோடி
13 Sep 2025இம்பால், மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம்
13 Sep 2025சென்னை : மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக்: ஓமனை வீழ்த்தியது பாகிஸ்தான் 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி
13 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி ஓமனை 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி எளிதில் வெற்றிப்பெற்றது.
-
7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
13 Sep 2025மாஸ்கோ : 7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக சனிக்கிழமை காலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது: கனிமொழி எம்.பி.
13 Sep 2025மணிப்பூர் : தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
-
மத்திய அரசு திட்டங்களுக்கு நேரடி நிதி; ரிசர்வ் வங்கியில் கணக்கு துவக்கிய தமிழ்நாடு அரசு
13 Sep 2025சென்னை : மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான செலவு தொகையை, நேரடியாக வழங்கும் பணி துவங்கி உள்ளது.
-
கிரிக்கெட் உபரகணங்கள் வழங்கும் நிகழ்ச்சி: அ.தி.மு.க. விளையாட்டு அணியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
13 Sep 2025கோவை : அ.தி.மு.க.வில் உள்ள விளையாட்டு அணியிலும் வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.
-
வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்க்கும் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிப்பு? ஐ.நா. அறிக்கைக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு
13 Sep 2025பியாங்யாங், வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தால் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஐ.நா.
-
மிசோரத்தில் ரூ. 8,070 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பைராபி-சாய்ராங் புதிய ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
13 Sep 2025ஐஸ்வால் : மிசோரமில் பைராபி - சாய்ராங் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
13 Sep 2025சென்னை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை? வெளியான புதிய தகவல்கள்
13 Sep 2025புதுடெல்லி. வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5-ம் தேதிக்குள் தேர்தல் : இடைக்கால அரசு அறிவிப்பு
13 Sep 2025காத்மாண்டு : வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி தவித்த நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
-
வரும் 20-ம் தேதி நடைபெற இருந்த நாகையில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
13 Sep 2025நாகை, நாகை மாவட்டம் அவுரித்திடலில் வரும் 20-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
காங்கோவில் பயங்கரம்: 2 படகு விபத்துகளில் 193 பேர் பலி
13 Sep 2025கின்சாஹா : காங்கோவில் நிகழ்ந்த 2 படகு விபத்துகளில் 193 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: ஐ.நா. தீர்மானத்துக்கு 142 நாடுகள் ஆதரவு : அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்ப்பு
13 Sep 2025நியூயார்க் : பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.
-
பாக்.கிற்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ-க்கு கடும் எதிர்ப்பு
13 Sep 2025துபாய் : பாக்.கிற்கு எதிரான போட்டியில் இன்று இந்திய அணி விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ.,க்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை : தமிழக தலைமைத்தோ்தல் அதிகாரி தகவல்
13 Sep 2025சென்னை : தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளாா்.
-
பழநி கோவிலுக்கான ரூ.100 கோடி நிலம் மீட்பு
13 Sep 2025பழநி, பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
-
கர்நாடகாவில் விநாயகா் சிலை ஊா்வல விபத்தில் 9 போ் பலி : பிரதமர் மோடி இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
13 Sep 2025புதுதில்லி : கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சனி
-
இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி
13 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமையால் அதிர்ச்சி சம்பவம் நிளவியுள்ளது.