கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் 18.3.2018 தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் வே.ப.தண்டபாணி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் வே.ப.தண்டபாணி, தெரிவித்ததாவது.
ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற 18.03.2018 அன்று வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.வேலைவாய்ப்பு முகாமிற்கு வருகைபுரியும் பெண் வேலை நாடுநர்களுக்கு உரிய வழிகாட்டுதல் குறித்து அனைவருக்கு கல்வி இயக்க களப்பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. வேலைவாய்பு முகாம் நடைபெறுவது தொடர்பாக கடலூர் மாவட்ட இணையதளத்தில் இளைஞர்கள் அறியும் வகையில் பதிவு செய்து விளம்பரப்படுத்தும் பணி மேற்கொள்ள தேசிய தகவல் மைய அலுவலருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளுர் தொலைக்காட்சிகளிலும் இது தொடர்பாக பொது மக்கள் அறியும் வண்ணம் ஒளிபரப்ப பணி மேற்கொள்வது தொடர்பாக அரசு கேபிள் டி.வி. வட்டாட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. கிராம அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது குறித்து மகளிர் திட்ட திட்ட அலுவலருக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்ய வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள அனைத்து தொழில் முனைவோருக்கும் முகாம் தொடர்பான செய்தியினை தெரிவித்து அதிக எண்ணிக்கையில் தொழில் முனைவோர்கள் பங்கேற்க செய்ய வேண்டுமென நடுத்தர சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் கூட்டமைப்பு தலைவருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. முகாமிற்கு வரும் மனுதாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வசதியினை செய்து தர வேண்டுமெனவும், போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தி தர வேண்டுமெனவும், வாகனங்களை உரிய இடத்தில் நிறுத்திட ஆவண செய்ய வேண்டுமெனவும் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. தனியார் வேலைவாய்பு முகாம் நடைபெறும் அன்று முகாம் இடத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக தீயணைப்பு வாகனத்தினை தயார் நிலையில் வைத்திருக்க மாவட்ட தீயணைப்பு அலுவலருக்கும், தங்குதடையின்றி மின்சாரம் வழங்கிட கடலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளருக்கும், முகாம் நடைபெறும் இடத்தினை முதல் நாளும், முகாம் முடிவுற்ற பின்னரும் சுத்தமாக வைத்திருக்கவும், குடிநீர் வசதி செய்து தரவும் நகராட்சி ஆணையருக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. தனியார் வேலைவாய்பு முகாம் நடைபெறுவது குறித்து விளம்பர ஸ்டிக்கர்களை பேருந்துகளில் ஒட்டி விளம்பரப்படுத்திட வேண்டுமெனவும், முகாம் நடைபெறும் இடத்திற்கு செல்ல சிறப்பு பேருந்து வசதிகள் செய்து தர வேண்டுமெனவும், அம்மா குடிநீர் அரங்கம் அமைத்து தர வேண்டுமென தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் தனியார் வேலைவாய்ப்பு முகாமிற்கு வருகைபுரியம் மனுதாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் மருத்துவ குழுவினரை தயார் நிலையில் வைத்திருத்தல், ஆம்புலன்ஸ் வாகனத்தினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென துணை இயக்குநர் (சுகாதாரம்) அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கூஷ்ணாதேவி, உதவி இயக்குநர் (வேலைவாய்ப்பு) கருணாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வி.சீனுவாசன், கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய (மகளிர்) முதல்வர் செந்தில்வேலன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜி.சிவக்குமார், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பி.மணி உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.