முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில் உலக மகளிர் தினவிழா கொண்டாட்டம் 20 சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 35 லட்சம் கடனுதவி நபார்டு வங்கி மேலாளர் ஸ்ரீதர் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பாரத ஸ்டேட் வங்கி, விஃப்போ அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தினவிழாவில் 20 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ. 35 லட்சம் கடனுதவியினை நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ஸ்ரீராம் வழங்கினார்.

கடனுதவி

திருவண்ணாமலை வேங்கிக்கால் பூமாலை வணிக வளாகத்தில் நபார்டு வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, மற்றும் விஃப்போ அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு வந்த அனைவரையும் விஃப்போ அறக்கட்டளை இயக்குநர் பி.சசிகலா வரவேற்றார். சுபா, பி.இ.செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தாட்கோ மாவட்ட மேலாளர் மா.ராமகிருஷ்ணன், ரீடு தொண்டு நிறுவன இயக்குநர் பி.கே.ஏழுமலை ஆகியோர் சிறப்புரையாற்றினர். பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் கே.காமாட்சி, கனரா வங்கி முதன்மை மேலாளர் வி.சுகுமார், கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் ஏ.ராஜ்குமார், மகளிர் கூட்டுபொறுப்புகுழு உறுப்பினர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

விழாவுக்கு தலைமை வகித்த நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ஸ்ரீராம் பாரத ஸ்டேட் வங்கி மூலம் 20 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ. 35 லட்சம் கடனுதவியினை வழங்கி பேசுகையில், கடந்த ஆண்டு 100 குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது. 2018-19ம் ஆண்டுக்கு 200 சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்க திட்டமிட்டுள்ளோம். கடன் பெற்றுள்ள சுயஉதவிக் குழுவினர் கடனை திருப்பி கட்டினால்தான் திருப்பி மற்றவர்களுக்கு கடன் வழங்க முடியும் பிளாஸ்டிக் ஒழிக்க மகளிர் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் பெண் சிசு கொலை தடுக்கப்படவேண்டும் என்றார். அதனைத் தொடர்ந்து அவர் பேசும்போது கனரா வங்கி மூலம் 5 சுயஉதவிக்குழுக்கள் கடன் பெற்று முறையாக செலுத்தியுள்ளனர். அவர்களை உலக மகளிர் தினவிழாவான இந்நாளில் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் வங்கி அதிகாரிகள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஜெ.ரேவதி நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை விஃப்போ அறக்கட்டளை இயக்குநர் பி.சசிகலா செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து