முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்பூரில் உள்ள சிட்கோ மகளிர் தொழிற்பூங்காவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேர்த்திமிகு மையம் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, குத்துவிளக்கேற்றினார்

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      சேலம்
Image Unavailable

 

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம், கருப்பூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிட்கோ மகளிர் தொழிற்பூங்காவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேர்த்திமிகு மையத்தினை சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிகாட்சி வாயிலாக நேற்று (13.03.2018) திறந்து வைத்ததை தொடர்ந்து கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, நேர்த்திமிகு மையத்தின் செயல்பாட்டினை குத்துவிளக்கேற்றி துவக்கி பேசும்போது தெரிவித்ததாவது :தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், தொழில்முனைவோரின் மேம்பாட்டிற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களையும், வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து வருகின்றார்கள். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் தொழில்வளர்ச்சியை மேம்படுத்திட மேலும் புதிய தொழிற்சாலைகளை உறுவாக்கிட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். புதிய தொழில் முனைவோர் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து அவற்றை பயன்படுத்தி கொள்ளும் வகையில் தமிழகத்தில் 5 சிட்கோ மகளிர் தொழில்பூங்காக்களில் நேர்த்திமிகு மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிகாட்சி வாயிலாக இன்று திறந்து வைத்துள்ளார்கள். சேலம் கருப்பூரில் உள்ள சிட்கோ வளாகத்திலும் நேர்த்திமிகு மையம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று திறந்து வைக்ப்பட்டுள்ளது. இதனை மகளிர் தொழில்முனைவோர் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

விவசாயம்

சேலம் மாவட்டத்தில் ஏரத்தாள 35 சதவீதம் பேர் நேரடியாக விவசாயத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மீதமுள்ள 65 சதவீதத்தினர் சிறு, குறு, நடுத்தர தொழில் அல்லது தொழில்சார்ந்த பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அவ்வாறு தொழில்துறையில் ஈடுப்பட்டு வருவோருக்கு தேவையான உதவிகளையும், வசதிகளையும் செய்திட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். இவ்வுத்தரவிற்கிணங்க மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொண்டு வருகின்றது. ஆதனை தொழில்முனைவோர் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். சேலம் மாவட்ட வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகின்றார்கள். முக்கியமாக சேலம் மாவட்டத்தில் புதிய பஸ்போர்ட் அமைக்கப்படவுள்ளது. மேலும் வருகின்ற 25 ம் தேதி முதல் விமான போக்குவரத்து சேவையும் துவங்கப்படவுள்ளது. மேலும், சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் இராணுவ தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளும் துவங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு பல விதமாக தொழில் வளர்ச்சிக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தொழில்முனைவோர் இந்த நல்ல வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். குறிப்பாக புதிய தொழில் முனைவோர் மற்றும் பெண் தெழில்முனைவோர் தொழில் தொடங்க அதிகளவில் முன்வரவேண்டும் என்றார்.

முன்னதாக கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, , ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வெற்றிவேல் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றிவைத்து நேர்த்தி மைய பணிகளை துவக்கி வைத்தனர். மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் எஸ்.இராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் ஓமலூர் வருவாய் வட்டாட்சியர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், பெண் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து