முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.க்களை ராஜினாமா செய்யச் சொல்வது ஸ்டாலினின் சித்து விளையாட்டு: தம்பிதுரை

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, நாடாளுமன்றத்தில் இருந்து எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொல்வது ஸ்டாலின் சித்து விளையாட்டுகளில் ஒன்று என தம்பிதுரை கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அ.தி.மு.க எம்.பி.க்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழர்களின் உணர்வுகளை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறோம். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராடியும் மத்திய அரசு செவிசாய்க்க மறுக்கிறது. நாடாளுமன்றத்தில் 50 எம்.பி.க்களுக்கும் மேல் இருந்தால்தான் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும். 37 எம்.பி.க்களைக் கொண்ட அ.தி.மு.கவால் எப்படி தீர்மானம் கொண்டு வர முடியும்? காவிரிக்காக அ.தி.மு.க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் ஆதரிக்குமா? சோனியா மற்றும் ராகுலிடம் பேசி ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்.

அ.தி.மு.க எம்.பிக்களை பதவி விலகச் சொல்வது ஸ்டாலினின் சித்து விளையாட்டுகளில் ஒன்று. நாடாளுமன்றத்தில் இருந்து கனிமொழியை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவும், அரசியல் சித்து விளையாட்டுக்காகவும் எம்.பி.க்கள் ராஜினாமா குறித்து ஸ்டாலின் பேசுகிறார். பா.ஜ.கவுக்கு ஆதரவாக அ.தி.மு.க செயல்படவில்லை. தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் ஆந்திர அரசுக்கு ஆதரவாக செயல்படுமாறு ஸ்டாலின் கூறுகிறார். ஆந்திராவில் செம்மரம் வெட்டவந்தவர்கள் என்று கூறி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கண்டுகொள்ளவில்லை. தமிழர்களை சுட்டுக் கொல்வது உட்பட தமிழகத்தை தொடர்ந்து வஞசிக்கும் ஆந்திர அரசுக்கு ஸ்டாலின் ஆதரவு அளிக்கச் சொல்கிறாரா? என்று தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து