களக்காட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      திருநெல்வேலி
Plastics Awareness Camp in kalakad

களக்காடு வனத்துறை சார்பில் தலையணையில், களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனரும், தலைமை வனபாதுகாவலருமான     வெங்கடேஷ் ஆலோசனையின் படி பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

விழிப்புணர்வு முகாம்

முகாமை களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனரும், வன உயிரின காப்பாளருமான              ஆரோக்கியராஜ் சேவியர் தொடங்கி வைத்தார். முகாமில் களக்காடு கோமதி அருள்நெறி மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த          மாணவிகள்   கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு          மாணவிகள் தலையணை          சாலையில் பிளாஸ்டிக்        பொருட்களை அகற்றினர். இதில் திருக்குறுங்குடி வனசரக அலுவலர் புகழேந்தி பள்ளி தலைமை ஆசிரியை ஞானசெல்வம், ஆசிரியைகள், வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்புக்          காவலர்கள் மற்றும் பலர் கலந்து    கொண்டனர். இதுகுறித்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனரும், வன உயிரின       காப்பாளருமான ஆரோக்கியராஜ் சேவியர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, கூறியதாவது: வன விலங்குகளையும், வன வளங்களையும் பாதுகாக்கும் பொருட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் வன உயிரின கிளப் ஏற்படுத்த வேண்டும். இதற்கு தேவையான வழிகாட்டுதல் வனத்துறை சார்பில்               மேற்கொள்ளப்படும். மாணவமாணவிகளுக்கு காடுகளை பற்றியும், அவைகளை பாதுகாப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்    விதமாக தலையணையில் விழிப்புணர்வு முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்காக தலையணையில் மாணவர்கள் தங்குவதற்கு இடவசதி அளிக்கப்படும், மலை ஏறுவது பற்றியும் பயிற்சி கொடுக்கப்படும். என்.சி.சி., என்.எஸ்.எஸ். ஜே.ஆர்.சி போன்ற அமைப்புகளை சேர்ந்த மாணவர்களும் தலையணையில் முகாம் நடத்திக் கொள்ளலாம். வன உயிரின கிளப்பில் பங்கேற்கும்         மாணவர்களை தமிழகத்தில் உள்ள ஆனைமலை, சத்தியமங்களம், முதுமலை புலிகள் காப்பகங்களுக்கும் சுற்றுலா அழைத்து செல்லும் திட்டமும் உள்ளது. இதில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவமாணவிகள், பள்ளி, தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் களக்காடு வனத்துறை அலுவலகத்தை தொடர்பு     கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து