நெல்லையில் நடைபெற்ற சமூக நல்லிணக்க நாள் விழாவில், 58 பயனாளிகளுக்கு ரூ.80 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      திருநெல்வேலி

திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருண்ஸ் மஹாலில் டாக்டர் அம்பேத்கர் 127வது பிறந்த நாள் மற்றும் சமூக நல்லிணக்க நாள் விழா  நடைபெற்றது.

சமூக நல்லிணக்க நாள் விழா 

இவ்விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி, ,  கலந்து கொண்டு, 58 பயனாளிகளுக்கு ரூ.80 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில், கலெக்டர்  பேசியதாவது-இன்று டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் சமூக நல்லிணக்க நாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டாக்டர் அம்பேத்கர்  பிற்படுத்தப்பட்டோர் சமுதாய மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்டவர். டாக்டர் அம்பேத்கர்  அமெரிக்கா மற்றும் லண்டனில் படித்து பட்டயம் பெற்றவர். பொருளாதாரத்தில் இரட்டை டாக்டர் பட்டம் பெற்ற மாமேதை டாக்டர் அம்பேத்கர்  ஆவார். இந்தியாவில் ரிசர்வ் வங்கி துவங்குவதற்கு வித்திட்டவர். அரசு பணியாளர்களுக்கு எட்டு மணி நேரம் பணி மற்றும் மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள், பெண்களுக்கான சொத்து உரிமைகள் போன்ற பல்வேறு சட்ட முன்வடிவுகளை இயற்றியவர். எனவே, டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளினை நாடு முழுவதும் சமூக நல்லிணக்க நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.  முதல் மே 5ம் தேதி வரை 15 நாட்களுக்கு கிராம சுயாட்சி இயக்கத்தின் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் 29 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, 15 நாட்களில் அரசின் முக்கியமான திட்டங்கள் தன்னிறைவு அடையும் சிறப்பு முயற்சியாக மேற்கொள்ளப்படுகிறது. அக்கிராமங்களில் 100 சதவிதம் மின் வசதி செய்தல், அனைத்து வீடுகளுக்கும் எல்ஈடி விளக்குகள் வழங்குதல், 2 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நபர்களை கண்டறிந்து, சுகாதாரத் துறையினர், அங்கன்வாடி பணியாளர்களுடன் இணைந்து தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்வார்கள். இத்திட்டத்தில் தூய்மை பாரத இயக்கம், தனிநபர் கழிப்பறை உபயோகித்தல், சுகாதாரம், அனைத்து விதமான அரசின் திட்டங்களை 29 கிராம மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என கலெக்டர்  தெரிவித்தார்.இன்று நடைபெற்ற சமுக நல்லிணக்க நாள் விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம்  15 பயனாளிகளுக்கு ரூ.17.10 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், தாட்கோ மூலம் 19 பயனாளிகளுக்கு ரூ.41.29 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், சமூக நலத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.11.26 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் ஆக மொத்தம் ரூ.69.65 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  கலெக்டர் சந்தீப் நந்தூரி,,  வழங்கினார். மேலும், கலெக்டர் , சமூக நலத்துறையின் மூலம் டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் கலப்பு திருமணம் செய்த 6 தம்பதியினர்களுக்கும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையின் மூலம் 6 சமூக ஆர்வலர்களுக்கும் கலெக்டர்  பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.  மாநில அளவில் சிறந்த ஆதிதிராவிடர் நல பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட நல்லம்மாள்புரம் டாக்டர் அம்பேத்கர் அரசு ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரை பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் தீண்டாமை கடைபிடிக்காத கிராமமாக துரைச்சாமியாபுரத்தை தேர்வு செய்து, கிராமத் தலைவர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோர்களை பொன்னாடை அணிவித்து கௌரவித்து, ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். சமூக நல்லிணக்கம் குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் விஜயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, மாவட்ட தாட்கோ மேலாளர் மாரிமுத்து, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் கஜேந்திரநாதன்,  சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.செந்தில்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக கண்காணிப்பாளர் பெனிட் ஆசிர் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து