முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் ரெட்கிராஸ் சார்பில் காவல்துறையினருக்கான முதலுதவி பயிற்சி முகாம்

செவ்வாய்க்கிழமை, 1 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்-தமிழ்நாட்டில் பெருகி வரும் வாகன எண்ணிக்கை,  சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்காத தன்மை மற்றும் சாலையில் செல்லும் போது தகவல் தொடர்பு மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. இவ்விபத்துகளில் காயமடைந்தவரை பாதுகாப்பதற்கும் விபத்திலிருந்து மீட்பதற்கும் பலர் முன் வந்தாலும் முறையான முதலுதவி பயிற்சி இல்லாததால் விபத்தில் சிக்கியவருக்கு அதிகம் பாதிப்பு தெரியாமலேயே ஏற்பட்டு விடுகிறது. இதனை தவிர்க்க முறையான முதலுதவி  பற்றிய விழிப்புணர்வு பயிற்சி அவசியம். இதற்காக ராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் மூலம்  மாவட்ட காவல் துறை வாகன ஓட்டுனர்கள் மற்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்து காவலர்களுக்கான முதலுதவி பற்றிய விழிப்புணர்வு முகாமினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒம்பிரகாஷ்மீனா தலைமையில் நடைபெற்றது. ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் சரக காவல் துணைத்தலைவர் காமினி முகாமினை துவக்கி வைத்தார். காவல் தனிப்பிரிவு ஆய்வாளர் ஜான்பிரிட்டோ வரவேற்றார்.
    நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனைவர் எஸ். வெள்ளத்துரை, மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவீந்திர பிரகாஷ் ஆகியோர் முதலுதவியின் அவசியம் பற்றி பேசினர். நிகழ்ச்சியில், மாநில முதலுதவி  பயிற்றுனர் எஸ். அலெக்ஸ் கலந்துகொண்டு பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில், முதல் உதவியின் நோக்கம் மற்றும் பயன், உயிரை பாதுகாக்கும் முறைகள், முதல் உதவியின் போது செய்யக் கூடாதவை, மூச்சு பயிற்சி ஆகியவை பற்றி பவர் பாயிண்ட் மற்றும் செயல் முறை விளக்கம் மூலம் கற்றுக் கொடுக்கப் பட்டது. காவல் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் லிங்கபாண்டி மற்றும்  மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் ஆகியோர் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து