தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார் அ.தி.மு.க நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2018      தேனி
OPR  news 5 6 18

தேனி ஜுன் 6 தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளராக ப.ரவீந்திரநாத்குமார் அவர்களை கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி. கே. பழனிச்சாமி அவர்களும் நியமனம் செய்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த மாவட்ட அம்மா பேரவை செயலாளருக்கு காட்ரோடு, பெரியகுளத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து இன்று மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம். சையதுகான்  இல்லத்திற்கு நேரில் சென்ற மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார் வாழ்த்து பெற்றார். மேலும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுப்பிள்ளை, முன்னாள் மாவட்ட கழக செயலாளர் டி.டி.சிவக்குமார்,; மாவட்ட கழக துணை செயலாளர் கோட்டூர் வசந்தா ஆகியோர்களின் இல்லங்களுக்கு சென்ற மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார் அவர்கள் நேரில் சந்தித்து  அனைவரிடமும் வாழ்த்து பெற்றார்.
 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து