முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித்ஷா இயக்குநராக உள்ள வங்கியில் பல கோடி ரூபாய் பழைய நோட்டுகள் டெபாசிட்

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா இயக்குநராக பதவி வகித்து வரும் ஆமாதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். தங்களிடம் உள்ள அத்தகைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. அதைத் தொடர்ந்து, பல்வேறு வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய கூட்டம் அலை மோதியது. கூட்டுறவு வங்கிகளில் பல முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, அந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதி முதல் அத்தகைய வங்கிகளில் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது. எனினும், நவம்பர் 9-ம் தேதி முதல் 14 -ம் தேதி வரை ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் மொத்தம் ரூ.754.59 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இது இதர மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் செலுத்தப்பட்ட தொகையைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும். மனோரஞ்சன் எஸ். ராய் என்பவர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவலை அளிக்கக் கோரி விண்ணப்பித்திருந்தார். அவரது கேள்விக்கு, வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் தலைமை பொது மேலாளரும், மேல்முறையீட்டு அதிகாரியுமான எஸ்.சரவணவேல் பதிலளித்தார். அந்த பதிலில் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளது. அந்த வங்கியின் தலைவராக கடந்த 2000-ம் ஆண்டு முதல் அமித்ஷா பதவி வகித்தார். அதையடுத்து, அந்த வங்கியின் இயக்குநராக பல ஆண்டுகளாக அவர் இருந்து வருகிறார். ஆர்.டி.ஐ-யின் இந்த தகவலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து