முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் சுற்றுலா வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்

வியாழக்கிழமை, 28 ஜூன் 2018      தேனி
Image Unavailable

   தேனி-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் சார்பில், மாவட்ட அளவில் சுற்றுலா வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ)  மாவட்ட வருவாய் அலுவலர்  .ச.கந்தசாமி   தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களை பிறமாவட்ட சுற்றுலாப்பயணிகள் எளிதில் அறிந்து கொள்ளும் பொருட்டு புதிய செயலி ஒன்றை ஏற்படுத்துவது, சுற்றுலாப்பயணிகள் மஞ்சளாறு அணையினை தொலை தூரத்தில் இருந்து பார்த்து அறிந்து கொள்ளும் வண்ணம் அடையாள குறி அமைப்பது, குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் ரூ.118.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து மேற்கொள்ளுவது, மஞ்சளாறு அணையினை பொதுமக்களின் வசதிக்காக பூங்காக்களை ஏற்படுத்துவது குறித்தும், வைகை அணையில் பூங்காக்களை மேம்படுத்துவது குறித்தும், மேகமலை, சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஏதுவாக மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கு விடுதிகளை முறைப்படுத்துவது, அனுமதி இல்லாத விடுதிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ)   மாவட்ட வருவாய் அலுவலர்   துறை அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ)  மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவிக்கையில், சுற்றுலாத்தளங்களில் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்திடவும், சுகாதாரமான  குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திடவும், சுற்றுலாத்தளங்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் தரமான உணவு பொருட்களாக என்பதனை கண்காணித்திடவும், சுற்றுலா தளங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை அறவே தவிர்த்திட பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் விபரங்களுடன் பொதுமக்கள் கூடும் இடங்களில் அறிவிப்பு பலகைகளை அமைத்திடவும், அனைத்து பொதுமக்களும் எளிதில் சுற்றுலாத்தளங்களுக்கு சென்று வர போக்குவரத்து வசதியினை ஏற்படுத்திடவும், குச்சனூர் அருள்மிகு சனீஸ்வரன் பகவான் திருக்கோவிலில் கட்டுப்பட்டு வரும் தங்கும் விடுதிக்கான கட்டடப்பணிகளையும், பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சுற்றுலாத்தளங்களுக்கு  தேவையான அடிப்படை வசதிகளை நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ)  மாவட்ட வருவாய் அலுவலர்  .ச.கந்தசாமி   தெரிவித்தார்.
ஆலோசனைக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்   பா.திலகவதி  , மாவட்ட சுற்றுலா அலுவலர்   உமாதேவி  , உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)  .சேதுராமன் , துணை காவல் கண்காணிப்பாளர் (பெரியகுளம்)  .ஆறுமுகம்  , பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) உதவி பொறியாளர்  .குபேந்திரன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து