முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பம் அருகே இயந்திர நடவுப் பணியை துவக்கி வைத்தார் கம்பம் எம்.எல்.ஏ.எஸ்.டி.கே.ஜக்கையன்: விவசாயிகள் மகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      தேனி
Image Unavailable

 கம்பம்,- தேனி மாவட்டம் கம்பம் அருகே.க.புதுப்பட்டி பகுதியில் இயந்திர நடவுப் பணியை கம்பம் எம்.எல்.ஏ.எஸ்.டி.கே.ஜக்கையன் துவக்கி வைத்தார்.கம்பம் அரு  கே உள்ள நீலகண்டன் கோவில் பகுதி நெல் வயல்களில் இயந்திர நடவு முறையில் அதிக தமிழக அரசின் மானியம்,மகசூல் உள்ளிட்ட பல்வேறு பயன்கள் உள்ளதால் நெல் விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முகமதுஅப்துல் நசீர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு அடுத்து கம்பம் பள்ளதாக்கில் இரு போக நெல் சாகுபடி கூடலு£ர் முதல் பழனி செட்டிப்பட்டி வரை செய்யப்பட்டு வருகிறது.தொழிலாளர் பற்றாக்குறை இருக்கும் இயந்திர நடவு முறை சிறந்த மாற்றாக கருதப்படுகிறது.கம்பம் புதுப்பட்டி நீலகண்டன் கோவில் பகுதியில் இயந்திர நடவு செயல் விளக்க திடலை துவக்கி வைத்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன்,மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முகமது அப்துல் நசீர் ஆகியோர் கூறியதாவது.நெல்லில் இயந்திர நடவு மிகச் சிறந்த முறையாகும்.ஓரு ஏக்கருக்கு ஓரு சென்ட் நாற்று வளர்க்க போதுமானது.8 முதல் 10 கிலோ விதைகள் தேவைப்படும்.14 முதல் 18 நாள் வயது விதைகளை நடவு செய்யலாம்.அவ்வாறு இளம் நாற்றுக்களை நடுவதால் விரைவில் வேர் பிடித்து 75 சிம்புகள் வரை உருவாகும்.25 செ.மீஇடைவெளியில் வரிசையாக நடுவதால் நல்ல காற்றோட்டமும் சூரிய ஓளியும் கிடைக்கும்.இதனால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.ஏக்கருக்கு தமிழக அரசின் மானியமாக ரூ 5 ஆயிரம் வழங்கப்படுகிறது.இப்பகுதி விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.இந்த நிகழ்ச்சியில் கம்பம் வேளாண் உதவி இயக்குனர் முருகேசன்,துணை வேளாண் அலுவலர் புகழேந்தி,உதவி வேளாண் அலுவலர்கள் கணேசன்,புவனேந்திரன் வளர்மதி,சட்டமன்ற உறுப்பினர் நேர்முக உதவியாளர் சுரேஷ்குமார்,அலுவலக மேலாளர் தினா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து