முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலுவை வழக்குகளுக்கு நிரந்தர தீர்வு காண நீதிபதிகளின் ஓய்வு வயது வரம்பை உயர்த்த மத்திய அரசு திட்டம்

புதன்கிழமை, 18 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது வரம்பை 65-ல் இருந்து 67 ஆக உயர்த்தவும் அதே போல் ஐகோர்ட் நீதிபதிகளின் வயது வரம்பை 62-ல் இருந்து 64 ஆக உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான மசோதா நடப்பு பாராளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஓய்வு வயது வரம்பு உயர்வு
சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளில் நீதிபதிகள் பற்றாக்குறையால் பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. அதைத் தவிர்க்கும் விதமாக மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது வரம்பை அதிகரித்துள்ளது. அதில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது வரம்பை 65-ல் இருந்து 67-ஆக உயர்த்தவும் அதேபோல் ஐகோர்ட் நீதிபதிகளின் வயது வரம்பை 62-ல் இருந்து 64 ஆக உயர்த்தவும் முடிவு செய்துள்ளது. மேலும் இந்த மசோதாவை நடப்பு பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காண..
மேலும் இந்தத் திட்டம் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதைத் தவிர்க்கவும் நீதிபதிகளின் பற்றாக்குறையைச் சரி செய்யும் விதமாகவும்தான் கொண்டு வரப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக மாநில உயர் நீதிமன்றங்களில் 25 முதல் 40 வரை காலி இடப்பணிகள் நிரப்பப்படாமல் இருந்து வருகிறது. இதற்கெல்லாம் தீர்வு காணும் விதமாகதான் இந்தத் திட்டம் கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி கே.கே. வேணுகோபால் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான வரைவு மசோதா முழுமையாகத் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தால் உச்ச நீதிமன்றத்தில் உள்ள 10 காலி பணி இடங்கள் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து