ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் நினைவு தின மலரஞ்சலி பேரணி

வியாழக்கிழமை, 26 ஜூலை 2018      ராமநாதபுரம்
abdulkalam news

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் முன்னாள் குடியரசுதலைவர் அப்துல்கலாமின் நினைவு தின மலரஞ்சலி பேரணி நடைபெற்றது.
    முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் மூன்றாவது நினைவு தினத்தினை நினைவு கூறும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் மற்றும்  யூத் ரெட் கிராஸ் ஆகியோர் இணைந்து அமைதிப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் மாவட்டத்தின்  ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலைகல்லூரி, முஹம்மது சதக் ஹமீது கலை  கல்லூரி,  சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி, முஹம்மது சதக் கல்வியியல் கல்லூரி  கீழக்கரை செய்யது ஹமீதா கலை கல்லூரி ஆகிய  5 கல்லூரிகளில் இருந்து சுமார் 400 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு டாக்டர் அப்துல் கலாம் புகைப்படத்தினை கையில் ஏந்தி சென்றனர். ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன்  தலைமையில் துணைத் தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் புரவலர் ராமநாதன் யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஆ. வள்ளி விநாயகம் ஆகியோர் முன்னிலையில்  ராமநாதபுரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் பேரணியினை துவக்கி வைத்தார். பேரணியானது டாக்டர் அப்துல் கலாம் படித்த ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் ஆரம்பித்து ரோமன் சர்ச் சந்திப்பு, சாலைத்தெரு, அக்ராகாரம் சாலை, அரண்மனைச்சாலை, மணிக்கூண்டு, வண்டிக்காரர் தெரு  பஜார் காவல் நிலைய சாலை வழியாக வந்து மீண்டும் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. 
    பேரணியில் டாக்டர் அப்துல் கலாம் திருஉருவப் படத்தின் முன் அணிவகுத்து நின்று ரெட் கிராஸ் புரவலர் எம். தேவி உலகராஜ் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலமாரன்  ஆகியோர்  தலைமையில் டாக்டர் அப்துல் கலாம் கொள்கைகளையும் குறிக்கோளையும் நடைமுறைப்படுத்துவதாக உறுதிமொழி எடுத்து கொண்டனர்.  இரண்டு நிமிட அமைதிப் பிரார்த்தனை நடைபெற்றது.  அனைவரும்  மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். பேரணிக்கான ஏற்பாடுகளை ரெட் கிராஸ் பொருளாளர் சி. குணசேகரன்,  ஆயுட் கால உறுப்பினர்கள் ஏ. மலைக்கண்ணன், எம். பழனிக்குமார், எல். கருப்பசாமி  மற்றும் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம்  ஆகியோர் செய்திருந்தனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து