டொரண்டோ மாஸ்டர்ஸ்: அரையிறுதிக்கு நடால் தகுதி

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Nadal qualify 2018 8 12

டொரண்டோ : ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு உலகின் முதல்நிலை வீரர் நடால் தகுதி பெற்றுள்ளார்.

காலிறுதியில் மரின் சிலிச்சை 2-6, 6-4, 6-4 என்ற கணக்கில் தோற்கடித்தார் நடால். அரையிறுதி ஆட்டத்தில் அவர் ரஷியாவின் காரென் காச்னோவை சந்திக்கிறார். காச்னொவ் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் ராபின் வீழ்த்தினார். நடப்பு சாம்பியன் அலெக்சாண்டர் வெரெவ் 6-3, 6-7, 4-6 என்ற செட் கணக்கில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸிடம் தோல்வியுற்றுள்ளார்.

மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டனில் இரண்டாம் இடம் பெற்ற கெவின்  ஆண்டர்சன் 6-2, 6-2 என கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து