இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ரிஷாப் பாண்ட் களமிறங்க வாய்ப்பு

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Bumrah 2018 8 15

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்ஹாமில் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. இதில்  இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

18-ம் தேதி...

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் 2 போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்து பின்னடைவை சந்தித்துள்ளது. இதையடுத்து, 3-வது போட்டி நாட்டிங்ஹாமில் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. அயர்லாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் காயமடைந்த பும்ரா, டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை.

களமிறங்க வாய்ப்பு

லார்ட்ஸ் டெஸ்ட்டுக்கு முன்பாக அவர் குணமடைந்து விட்டபோதும், முழு உடல் தகுதிபெற வேண்டும் என்பதால் ஓய்வு அளிக்கப்பட்டது. எனவே, அடுத்த போட்டியில் அவர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. அத்துடன், 4 இன்னிங்சுகளில் 21 ரன்கள் மட்டுமே சேர்த்த விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்கிற்கு பதில், இளம் வீரர் ரிஷாப் பாண்ட்டுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

மாற்றம் இல்லை...

அதேவேளையில், இங்கிலாந்து அணியில் மாற்றம் இருக்காது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பென் ஸ்டோக்ஸுக்கு மாற்றாக கடந்த போட்டியில் விளையாடிய கிறிஸ் வோக்ஸ் சதம் விளாசி, ஆட்டநாயகனாக ஜொலித்தார். எனவே, அவரே அணியில் நீடிக்கிறார். மேலும், இளைஞர் ஒருவரை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், பென் ஸ்டோக்ஸை நீதிமன்றம் விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து