முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சரிடம் மாநில இளையோர் விருது பெற்ற பாஸ்கரன் கலெக்டர் .பல்லவி பல்தேவ், சந்தித்து வாழ்த்து பெற்றார்

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018      தேனி
Image Unavailable

 தேனி -தமிழ்நாடு முதலமைச்சரிடமிரந்து 2017-18-ஆம் ஆண்டில் செய்த சமூக சேவைக்காக கடந்த 15.08.2018 அன்று நடைபெற்ற சுதந்திரதின விழாவில் மாநில இளையோர் விருது பெற்ற .சி. பாஸ்கரன்   மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ்,  சந்தித்து வாழ்த்து பெற்றார்.
 தமிழக அரசின் உத்தரவின்படி, மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட முதலமைச்சரின் மாநில இளையோர் விருதிற்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் நேரடியாக நேர்காணல் நடத்தப்பட்டு உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு மாநில விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அளவில் பெறப்பட்ட விண்ணப்பங்களை தேர்வு செய்ததில் தேனி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தின் அருகில் உள்ள பொட்டல்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரு.சி. பாஸ்கரன் என்பவருக்கு மாண்புமிகு முதலமைச்சரின் மாநில இளையோர் விருது கடந்த 15.08.2018 அன்று சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாண்புமிகு முதலமைச்சரால்  வழங்கப்பட்டது.
 மேலும், அங்கன்வாடி அமைத்திட தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தினைச் சுட்டிக்காட்டி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு அங்கன்வாடி மையம் கட்ட உறுதுணை புரிந்தமைக்காகவும், விளையாட்டு மைதானம், சாலை வசதி மற்றும் பேருந்து வசதி ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தொடர்பு புரிந்தமைக்காக விண்ணப்பதாரருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
 தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சரின் இளையோர் விருது பெற்ற திரு.சி. பாஸ்கரன் அவர்கள் இன்று 20.08.2018 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திரு.சி. பாஸ்கரன் அவர்களை பொதுமக்களின் மேன்மைக்காக மேலும் சிறந்த முறையில் பணியாற்றிட தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.சுப்புராஜ், நேரு யுவகேந்திரா அமைப்பைச் சேர்ந்த கே.ஸ்ரீராம் பாபு ஆகியோர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து