காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சாதனை:

வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2018      சிவகங்கை
alagappa news

 காரைக்குடி.- காரைக்குடி ரோட்டரி சங்கம் கார் மேளா விழாவையொட்டி நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கலை மற்றும் அறிவியல் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன.  இவற்றில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு  சமையல் போட்டியில் ரா.சங்கீதா, ஆ.பெனிட்டா கரோலின் மற்றும் கனிமொழி ஆகியோர் முதல் இடத்தையும்,  மௌன நாடகப் போட்டியில் மா.மதிவாணன், வி.யோகே~; குமார், விஜய், பா.தினே~; குமார், செ.ஆனந்தி மற்றும் அனுசியா ஆகியோர் முதல் இடத்தையும், தனி நடனப் போட்டியில் ரா.உ.இலக்கியா தேவி, என்ற மாணவி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். 
  பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நா.ராஜேந்திரன் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.  அப்போது கல்வியியல் கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் அ..பாலு, உதவி பேராசிரியைகள் எம்.சண்முக ரேவதி மற்றும் ஏ.ரூபி ஜெசிந்தா ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து