புதுவை - தாய்லாந்து விமான சேவை

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      வர்த்தகம்
flight 2017 09 08

புதுவையில் இருந்து ஐதராபாத் செல்லும் விமானத்தின் சேவையை விரிவுபடுத்தி ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்து நாட்டின் பேங்காங்கிற்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை அக்டோபர் மாதம் 10-ந் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்கான முன்பதிவும் தற்போது தொடங்கி உள்ளது. காலை 11.15 மணிக்கு புதுவையில் இருந்து புறப்படும் ஐதராபாத் விமானம் அங்கு பேங்காக் செல்லும் விமானத்துடன் நேரடி இணைப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

அந்த விமானம் இரவு 9.40 மணிக்கு பேங்காங் சென்று அடையும். அதே போல் இரவு 10.40 மணிக்கு பேங்காங்கில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் வந்து, அங்கிருந்து மறுநாள் காலை 11.25 மணிக்கு புதுவை வந்தடையும். உணவில்லா பயணத்துக்கு ரூ.12 ஆயிரத்து 500-ம், உணவுடன் கூடிய பயணத்துக்கு ரூ.13 ஆயிரத்து 200 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து