முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பரில் புதுவை வருகை

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable


புதுச்சேரி - மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகிற செப்டம்பர் மாத இறுதியில் புதுச்சேரி வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது.

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் நாராயணசாமி இடையே கடந்த இரு ஆண்டுகளாக கருத்து மோதல் இருந்து வருகிறது. இதனால், அரசுப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கிரண்பேடியின் செயல்பாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு முதல்வர் நாராயணசாமி பல முறை கடிதம் மூலமும் நேரிலும் தெரிவித்துள்ளார். எனினும், துணை நிலை ஆளுநருக்கு மத்திய அரசு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதனால், அரசின் பணிகளை முதல்வரால் வேகப்படுத்த இயலவில்லை.

இந்த நிலையில், முதல்வர் நாராயணசாமி, டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை  சந்தித்துப் பேசினார். அப்போது, நிதி மற்றும் செயல்பாடு தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதுவை அரசுக்குள்ள அதிகாரத்தை துணை நிலை ஆளுநருக்கு தெரிவிக்க வேண்டும். இதற்காக, புதுச்சேரிக்கு நேரில் வந்து அமைச்சரவை மற்றும் துணை நிலை ஆளுநர் மேற்கொண்டுள்ள செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதையேற்று, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் மாத இறுதியில் புதுச்சேரி வருவதாக உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது.
அதன்படி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், புதுச்சேரி வந்தால் துணை நிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையிலான கருத்து மோதல்கள் குறையும், அனைத்து கோப்புகளையும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்புவதும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து