முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிசர்வ் வங்கி அறிக்கை எதிரொலி: தண்டனைக்கு பிரதமர் தயாராக இருக்க வேண்டும்: காங். கிண்டல்

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பணமதிப்பு நீக்கத்தால் செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெரும்பாலான வங்கிக்குத் திரும்பி வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால், தண்டனைக்குப் பிரதமர் மோடி தயாராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கிண்டல் செய்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு நம்பர் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ரூ.15.41 லட்சம் கோடியை செல்லாது எனப் பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், செல்லாத ரூபாய் நோட்டுகளில் 99.3 சதவீதம் அதாவது ரூ.15.41 லட்சம் கோடியில் ரூ.15.31 கோடி வங்கிக்குத் திரும்பி வந்து விட்டது. ரூ.10,700 கோடி மட்டுமே வரவில்லை என்று தெரிவித்து இருந்தது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மக்களைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது,

ஊழல், தீவிரவாதம், கறுப்புப் பணத்தை ஒழிக்கக் கொண்டு வரப்பட்ட பணமதிப்பு நீக்கம் தவறானது என்பதை ரிசர்வ் வங்கியின் அறிக்கை நிரூபித்து விட்டது. நான் ஏதேனும் தவறு செய்தால் என்னைத் தண்டியுங்கள் என்று பணமதிப்பு நீக்கத்துக்குப் பின் பிரதமர் மோடி பேசினார். நான் பிரதமரிடம் பணமதிப்பு நீக்கத்துக்குப் பின் நீங்கள் கூறியது நடக்காவிட்டால், பணமதிப்பு நீக்கம் தவறாக அமைந்தால் உங்களை எங்கு வைத்துத் தண்டிப்பது என்று கேட்டேன். இப்போது தவறாக அமைந்து விட்டது. பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள விஜய் சவுக் பகுதியில் தண்டிக்கலாமா அல்லது வேறு எங்குமா? இதைப் பிரதமருக்கு நினைவுபடுத்தி விடுகிறேன். ஆதலால், பிரதமர் மோடி தண்டனைக்கு தயாராக இருப்பார் என நினைக்கிறேன் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து