160 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      விருதுநகர்
ktr news

விருதுநகர், -விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 160 பயனாளிகளுக்கு ரூ. 30,18,701 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை எம்.ஜி.ஆர் திடலில் தமிழக  அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு டி. ராதாகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார். இந்த விழாவில் 160 பயனாளிகளுக்கு ரூ. 30,18,701-   மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது,
தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக  அல்லும் பகலும் அயராது பாடுபட்டு ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியவர் அம்மா. அவர் அறிவித்த திட்டங்களை தமிழக முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக செயல்படுத்தி ஒரு நல்லாட்சியை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். இந்தியாவில் தமிழகத்தில் அம்மாவின் திட்டங்களால்  மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது. எனவே, மக்கள் அனைவரும் தமிழகத்தில் நல்லாட்சி தொடர்வதற்கு தங்களுடைய ஆதரவை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
 இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ. உதயகுமார், வருவாய் கோட்டாட்சியர் (சாத்தூர்) மங்கள பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மணிசேகரன், துணை இயக்குநர் (வேளாண்மை) பரமசிவம், வட்டாட்சியர்கள் ராஜ்குமார் (வெம்பக்கோட்டை), சாந்தி (சாத்தூர்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து