பெரியகுளத்தில் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் ஆலோசனை கூட்டம்

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      தேனி
anna news

தேனி - தேனி மாவட்டம் பெரியகுளத்;தில் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று பெரியகுளம் நகர கழக செயலாளர் என்.வி.ராதா தலைமையில், ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடுகபட்டி பேரூர் கழக செயலாளர் சுந்தரபாண்டியன் பேசும்போது போக்குவரத்து தொழிலாளர்கள் தினமும் ஏராளமான பொதுமக்களை சந்திக்கின்றனர். அரசியல் தெரியாவிட்டாலும், மக்களின் மனநிலையை தெரிந்து அரசியலின் நகர்வு குறித்து சரியாக கணித்து விடுவர். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு நமது இயக்கத்தை, கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான  ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் 100 ஆண்டுகளுக்கு மேல் கழகம் நிலைத்திருக்கும் என்ற  அம்மாவின் கூற்றை மெய்பிக்கும் வகையில் சிறப்பாக வழிநடத்தி செல்கின்றனர். தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் அண்ணா  போக்குவரத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இங்கு கூடியுள்ள நமது சங்க உறுப்பினர்கள் தொழிற்சங்க பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்கள் தங்களது விருப்ப மனுக்களை நகர செயலாளர் என்.வி.ராதா மற்றும்  ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ் ஆகியோரிடம் வழங்கலாம் என்றார். அதனை தொடர்ந்து 10க்கும் மேற்பட்டோர் மனுக்களை வழங்கினர். இக்கூட்டத்தில் 120க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ராஜ்குமார், காஜாமுயுனுதீன், வழக்கறிஞர்கள் ஜெயராமன், தவமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அண்ணா தொழிற்சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து