முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆங்கிலப் புத்தாண்டு: போடி கோவில்களில் சிறப்பு பூஜை

செவ்வாய்க்கிழமை, 1 ஜனவரி 2019      தேனி
Image Unavailable

போடி,-    ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு போடி கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.
     ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு போடி அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீநிவாசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தெய்வங்களுக்கு மலர் அங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். பூஜை ஏற்பாடுகளை கோவில் தக்கார் பாலகிருஷ்ணன், அர்ச்சகர் ஸ்ரீநிவாசவரதன் என்ற கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.
     இதேபோல் போடி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலிலும் ஆங்கில புத்தாண்டை  முன்னிட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை தெய்வங்களுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள், மகா தீபாராணை நடைபெற்றது. ஏற்பாடுகளே செயல் அலுவலர் அண்ணாதுரை மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.
     போடி வினோபாஜி காலனியில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் சிவலிங்க பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 9 வகை தீபங்களால் தீபாராதணை செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சங்கரநாராயணன்,  பஞ்சலிங்கங்களுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும் 108 காசுகள் வைத்து பூஜிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை கோவில் தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள், அர்ச்சகர் சேகர் ஆகியோர் செய்திருந்தனர்.
     இதேபோல் போடி பகுதியில் உள்ள தென்திருவண்ணாமலை என்றழைக்கப்படும் அருள்மிகு பரமசிவன் மலைக்கோவில், பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள கொண்டரங்கி மல்லையசாமி திருக்கோவில், பெரிய சவுடம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் பெண்கள் பலர் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
     தேவாரம் ரெங்கநாத பெருமாள் கோவில், சிலமலை பெருமாள் கோவில், தீர்த்தத் தொட்டி ஆறுமுகநாயனார் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் போடியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களிலும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலிகள் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து