முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை சென்ற 2 பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டும்: கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, சபரிமலைக்கு சென்ற இரண்டு பெண்களுக்கும் 24 மணி நேரமும் உரிய பாதுகாப்பு வழங்கும்படி கேரள காவல்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு எதிராக கேரளாவில் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. 

இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட்டனர். பாதுகாப்பு கருதி, இவர்கள் இருவரும் மாநில அரசின் பாதுகாப்பின் கீழ் உள்ளனர். இந்த சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை மலப்புரத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு கனகதுர்கா சென்ற போது, அவரது மாமியார் கனகதுர்காவை கடுமையாக தாக்கியதாக கூறப்பட்டது. இதில் கனகதுர்கா காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சபரிமலை கோவில் சென்று வழிபட்ட இரு பெண்களும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அவர்கள் இருவருக்கும் 24 மணி நேரமும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரள காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து