எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நகரி, திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜசாமி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3 தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளன. இதுதொடர்பாக கோவில் ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதி ரெயில்நிலையம் அருகே திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜபெருமாள் கோவில் உள்ளது. திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முதலில் இந்த கோவிலில் பெருமாளை தரிசனம் செய்த பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்வது வழக்கம்.
தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்வார்கள். இக்கோவிலில் சாமிக்கு அணிவிப்பதற்காக வைர, வைடூரிய கற்கள் பதிக்கப்பட்ட 3 தங்ககிரீடங்கள் இருந்தன. இவை கோவிலில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டு இருக்கும். தினமும் உற்சவமூர்த்திகளான கோவிந்தராஜசாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய சாமிகளுக்கு இந்த தங்க கிரீடங்கள் பிரம்மோற்சவம் மற்றும் திருவிழா காலங்களில் அணிவிக்கப்படுவது வழக்கம்.சாமி வீதியுலா முடிந்தவுடன் அலங்காரம் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு அறையில் வைத்து பூட்டப்படும். பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் தினமும் இரவு லாக்கரை திறந்து நகைகள் சரியாக இருக்கிறதா? என்று சரிபார்ப்பது வழக்கம்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் நகைகளை சரிபார்த்தனர். அப்போது சாமிக்கு அணிவிக்கும் 3 தங்க கிரீடங்கள் காணாமல் போனது தெரியவந்தது. ஆனால் மற்ற நகைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாயமான கிரீடங்கள் மொத்தம் ஒரு கிலோ 348 கிராம் எடையுள்ளவை.கிருஷ்ணதேவராயர் இந்த தங்க கிரீடங்களை கோவிலுக்கு வழங்கியுள்ளார்.
இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரி, போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலீசார் கோவிலுக்கு சென்று நகை பாதுகாப்பு அறை மற்றும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். கல்யாண உற்சவத்தின்போது தங்கக்கிரீடங்கள் இருந்துள்ளன.கல்யாண உற்சவம் நடந்த மண்டபத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா கடந்த ஒரு மாதமாக பழுதாகி உள்ளது. எனவே அதில் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.மேலும் அர்ச்சகர்கள் 3 பேரிடமும், கோவில் ஊழியர்கள் சிலரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுதவிர 6 தனிப்படைகள் அமைத்து பல்வேறு இடங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


