காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை

திங்கட்கிழமை, 25 மார்ச் 2019      அரசியல்
rahul 2019 03 03

புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பது பற்றி காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார். 
 
பாராளுமன்ற தேர்தலில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு மாநில கட்சிகளுடன் சுமூகமான கூட்டணி அமையவில்லை. காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை கேட்டதுதான் கூட்டணி உடன்பாடு ஏற்படாமல் போனதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. அங்கு ஆளுங் கட்சியாக உள்ள ஆம்ஆத்மி கட்சியுடன் கூட்டணி சேர காங்கிரஸ் விரும்பியது. ஆனால் காங்கிரஸ் 4 தொகுதிகளை கேட்டதால் ஆம்ஆத்மி கூட்டணிக்கு சம்மதிக்க வில்லை.

இதனால் தனித்து போட்டியிடும் நடவடிக்கைகளில் ஆம்ஆத்மி ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே ஆம் ஆத்மியுடன் சேர காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். இதுபற்றி நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் ஆலோசனை நடத்தினார். டெல்லி காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளுடன் அவர் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பது பற்றி விவாதித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து