எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நியூயார்க்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - சிரிய அதிபர் சந்தித்து பேசினார்.
போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான சிரியாவின் அதிபர் அகமது அல்-ஷரா அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 80 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு செல்லும் முதல் சிரிய அதிபர் அல்-ஷரா ஆவார். அவரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் வரவேற்றார். இந்த சந்திப்பின்போது, நகைச்சுவையான சில விசயங்கள் நடந்தன. ட்ரம்ப், வாசனை திரவியம் அடைக்கப்பட்ட பாட்டில் ஒன்றை ஷராவிடம் கொடுத்து விட்டு, இது ஆண்களுக்கான நறுமண திரவியம் என்றார்.
இதனை கேட்டு ஷரா சிரித்து விட்டார். அப்போது, ஷராவுக்கு சென்ட் அடித்து விட்டு, இது சிறந்த நறுமணம் என ட்ரம்ப் கூறினார். மற்றொரு பாட்டில் உங்களுடைய மனைவிக்கு என கூறி விட்டு, உங்களுக்கு எத்தனை மனைவிகள் உள்ளனர்? என கேட்டார். ட்ரம்ப் கேட்ட கேள்வியால் சிரிப்பலை எழுந்தது. அதற்கு ஷரா, ஒரே ஒரு மனைவிதான் என்றார். அவருடைய தோளில் தட்டி கொடுத்து விட்டு, நண்பர்களே, எனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது என ட்ரம்ப் கூறினார். இதன்பின் பதிலுக்கு ட்ரம்பிடம் உங்களுக்கு எத்தனை மனைவிகள்? என ஷரா கேட்டார். அதற்கு ட்ரம்ப், ஓ, இதுவரை ஒன்றுதான் என கூறி சிரிப்பை ஏற்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


