நயினார்கோவில் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகர் தீவிர வாக்கு சேகரிப்பு

வியாழக்கிழமை, 28 மார்ச் 2019      ராமநாதபுரம்
28 paramakudi news

    பரமக்குடி - பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகருக்கு நயினார்கோவில் ஒன்றியத்தில் செயலாளர் குப்புச்சாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து நயினார்கோவில், மேலியேந்தல்,கரைமேல்குடியிருப்பு,வல்லம்,பகைவென்றி,சிறகிக்கோட்டை ஆகிய கிராமங்களில் துவங்கி அக்கிரமேசி,பாண்டியூர், கங்கைகொண்டான் வழியாக எஸ்.வி.மங்கலம், மும்முடிசாத்தான் கிராமங்கள் வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.உடன் அமைச்சர் டாக்டர் மணிகண்டன்,மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி,முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் நிறைகுளத்தான் ஆகியோர்களுடன் நிர்வாகிகள்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து