மாவட்ட தேர்தல் அலுவலர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கான மூன்றாம்கட்ட பயிற்சி

திங்கட்கிழமை, 1 ஏப்ரல் 2019      ராமநாதபுரம்
2 ELECTION ZONAL OFFICERS  TRAINING

ராமநாதபரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பொது பார்வையாளர் ஆனந்த் ஸ்வரூப்  முன்னிலையில், தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல அளவிலான தேர்தல் அலுவலர்களுக்கு  மூன்றாம் கட்ட பயிற்சி நடைபெற்றது. அப்போது மாவட்;ட தேர்தல் அலுவலர் தெரிவித்ததாவது: நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளுக்காக  மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 123 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  குறிப்பாக, பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 28 அலுவலர்களும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 26 அலுவலர்களும், திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 34 அலுவலர்களும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 35 அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடவடிக்கைகளில் சுமுகமான வாக்குப்பதிவிற்கு மண்டல அலுவலர்களின் பங்கு மிக முக்கியமானதாகும்.  அதனடிப்படையில், தேர்தல் நடைமுறைகள் குறித்து அனைத்து மண்டல அளவிலான அலுவலர்களுக்கும் முதற்கட்ட பயிற்சி நிறைவேற்றப்பட்டு இன்றைய தினம் இரண்டாம் கட்ட பயிற்சி நடத்தப்படுகின்றது. மண்டல அலுவலர்களுக்கான முக்கிய பொறுப்புகளை பொறுத்த வரையில் நாடாளுமன்ற  மக்களவை பொதுத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டவுடன், தங்களது கட்டுப்பாட்டின் கீழுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உரிய வாக்காளர் பட்டியல் சென்று சேர்ந்துள்ளதாக என்பதை உறுதி செய்திட வேண்டும்.  அதேபோல, தங்களது கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளில் அமையப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை முறையே களஆய்வு செய்து அனைத்து மையங்களிலும் சாய்தள வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, கழிப்பறைக்கான தண்ணீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்திட வேண்டும்.
 மேலும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரங்கள் ஆகியவற்றை கையாளும் முறை குறித்து பயிற்சிகள் வழங்கி தெளிவுபடுத்திட வேண்டும்.  அதேபோல, வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான படிவங்கள், தளவாட சாமான்கள், கட்டு உரைகள், அழியா மை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் இருப்பினை உறுதி செய்து சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கு முறையே பிரித்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுதவிர, தேர்தல் நாளன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி வாக்குப்பதிவு நேரம் துவங்குவதற்கு முன்பாக வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்திறனை உறுதி செய்வதற்கான மாதிரி வாக்குப்பதிவு நடத்துவதோடு, மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் நீக்கி உறுதி செய்து சான்றொப்பம் இட வேண்டும்.  அதன் பின்னரே தேர்தல் வாக்குப்பதிவினை துவங்கிட வேண்டும்.  இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் மிகவும் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும்.
 அதேபோல, தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று சீரான கால இடைவெளியில் வாக்குப்பதிவு சதவீதம் குறித்த விவரத்தினை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவித்திட வேண்டும்.  வாக்குப்பதிவு நிறைவு பெற்றவுடன் அனைத்து மண்டல அலுவலர்களும் தங்களது கட்டுப்பாட்டின்  கீழுள்ள வாக்குச்சாவடி மையங்களிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரங்களை உரிய முறையில் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு சேர்ப்பதை உறுதி செய்திட வேண்டும்.  மேற்குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு நடவடிக்கையும் அந்தந்த மண்டல அலுவலர்களின் முக்கிய பொறுப்பாகும்.  எனவே மண்டல அலுவலர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளின் முக்கியத்துவம் உணர்ந்து விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். இவ்வாற தெரிவித்தார். இப்பயிற்சியில், கூடுதல் தேர்தல் அலுவலர் முத்துமாரி, உதவி தேர்தல் அலுவலர்கள் எஸ்.ராமன் (வருவாய் கோட்டாட்சியர்-பரமக்குடி), எம்.மதியழகன் (மாவட்ட வழங்கல் அலுவலர்-திருவாடானை தொகுதி), க.கயல்விழி (மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்-முதுகுளத்தூர்), உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து