முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு - ஆஸ்பத்திரியில் அனுமதி அமைச்சர் டாக்டர் மணிகண்டன் நேரில் ஆறுதல்

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்-ரா மநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் அ.தி.மு.க.நிர்வாகி பா.ஜ.க. வேட்பாளரை வரவேற்று ஆதரவளித்ததால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் அவரை அரிவாளால் வெட்டியதில் படுகாயடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.
     ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது திருப்பாலைக்குடி. இந்த ஊர் தெற்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் முகம்மதுகாசிம்(வயது43). ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் பொருளாளரான இவர் நேற்று முன்தினம் இரவு அதேபகுதியை சேர்ந்த யூசுப் என்பவரால் அரிவாளால் வெட்டப்பட்டு இடது கையில் படுகாயமடைந்தார். அதிக ரத்தம் வெளியாகி உயிருக்குஆபத்தான நிலையில் அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளித்ததன் பயனாக ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டார். டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த முகம்மது காசிம் கூறியபோது, கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகளுடன் எங்கள் பகுதியில்  வாக்கு சேகரிக்க வந்தார். அப்போது நான் எனது குடும்பத்துடனும், இஸ்லாமிய சகோதரர்களுடனும் சென்று சிறப்பான வரவேற்பு அளித்து ஆதரவை தெரிவித்தோம். இதனை பொறுக்க முடியாமல் பா.ஜ.க. வேட்பாளருக்கு எவ்வாறு ஆதரவளிக்கலாம் என்று விரோதம் கொண்டு தி.மு.க.வை சேர்ந்த யூசுப் என்பவர் இவ்வாறு கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இவ்வாறு கூறினார்.
    இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முகம்மது காசிமை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் முன்னாள் தொகுதி செயலாளர் தஞ்சி சுரேஷ்குமார், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அ.தி.மு.க-வினருடன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இதன்பின்னர் அவர் கூறியதாவது:- திருப்பாலைக்குடி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது அப்பகுதி இஸ்லாமிய பெண்கள், பொதுமக்கள் திரளாக வந்து வரவேற்று பா.ஜ.க. வேட்பாளர் நயினார்நாகேந்திரனுக்கு தங்களின் ஆதரவினை தெரிவித்ததுடன் தங்களின் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர். திருப்பாலைக்குடி பகுதி திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும் அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தேர்தல் முடிந்ததும் நிச்சயம் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தேன். இதனை மகிழ்ச்சியுடன் அனைவரும் ஏற்று கொண்டனர். இவ்வாறு இஸ்லாமிய பெண்களும், பெருந்திரளான பொதுமக்களும் வந்து ஆதரவளித்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல் கொலை முயற்சியில் இறங்கி உள்ளனர். இதுகுறித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    தேர்தல் ஆணையம் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதால் வாக்களிக்க வலியுறுத்தி வருவதை போல அதேபோல, வாக்காளர்களிடம் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் வாக்கு சேகரிப்பதும் ஜனநாயாக கடமையுடன், உரிமையாகும். அதனை தடுப்பது கடும் கண்டனத்திற்குரியது. தற்போதைய நிலையில் அ.தி.மு.க. ஆதரவு பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் நயினார்நாகேந்திரன் மக்களின் ஆதரவின் காரணமாக குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் நிலையில் உள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் விரக்தியில் தி.மு.க.வினர் இதுபோன்று செயல்பட்டு வருகின்றனர். தி.மு.க. ஒரு வன்முறை கட்சி. பிரியாணி கடையில் சாப்பிட்டுவிட்டு பணம்கொடுக்காமல் இருப்பது. புரோட்டா கடையில் வன்முறை, அழகு நிலையத்தில் தாக்குதல் என வன்முறையில் ஊறிய கட்சி. வன்முறை என்பது இருபக்கமும் கூரிய ஆயுதம். அதனை யாரும் கையில் எடுக்க கூடாது. பொதுவாகவே அ.தி.மு.க வன்முறைக்கு எதிரான கட்சி. வன்முறையை ஒருபோதும் அ.தி.மு.க ஆதரிக்காது. ஆனால் தி.மு.க. வன்முறையாலேயே வளர்ந்த கட்சி. இதுகுறித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து