நாளை பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிறது: அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2019      தமிழகம்
plus-2 exam 2019 03 01

சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19 ம்தேதி காலை 9-30 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, மாணவர்கள்,தங்களது தேர்வு முடிவுகளை இணையதளத்தின் மூலம் ஒரிரு நிமிடங்களில் அறிந்து கொள்ளலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வரும் 19 ம்தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளைமதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். www.tnresults.nic.in.,www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in. மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன்கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.பள்ளி பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக தேர்வுமுடிவு அனுப்பப்படும்.

தனித்தேர்வர்களுக்கும், , ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும்.20 ம்தேதி காலை 9. மணி முதல் 26 ம்தேதி. வரையில் தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி / தேர்வெழுதிய தேர்வு மையத்தின் தலைமைஆசிரியர் வழியாக (www.dge.tn.nic.in) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களது மதிப்பெண்பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். மேலும் 24 ம்தேதி காலை 9.மணி முதல் 26.ம்தேதி வரையிலான நாட்களில் பள்ளி மாணவர்கள் /தனித்தேர்வர்கள் தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும்பள்ளி மாணவர்கள்தாங்கள்பயின்றபள்ளிகள்வழியாகவும்,தனித்தேர்வர்கள் தாங்கள்தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும்வரும் 22 ம்தேதி முதல் 24 ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்..தேர்வர்கள் விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லதுமதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பது குறித்து தெளிவாக முடிவுசெய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர்விண்ணப்பிக்க இயலும் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண்மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகுஅவர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

விடைத்தாள், மறுக்கூட்டல் கட்டணம்

விடைத்தாளின் நகல் (பெறுவதற்கான கட்டணம் :ஒவ்வொரு பாடத்திற்கும் - ரூ.275/-மறுகூட்டல் கட்டணம்உயிரியல் பாடத்திற்கு மட்டும் - ரூ.305/-ஏனைய பாடங்கள்ஒவ்வொன்றிற்கும்) ரூ.205/ஆகும்,.விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தைவிண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும்ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள்தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும். விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுகள், விண்ணப்பிக்கும் முறை மற்றும்விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனதெரிவித்துக் கொள்ளப்படுகிறதுபிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 6 ம்தேதி முதல் 13.ம்தேதி வரையிலும் , பிளஸ் 1 சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 14 ம்தேதி முதல் 21.ம்தேதி வரையிலான நாட்களிலும் நடைபெறவுள்ளத

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து