இலங்கை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த விளையாட்டு வீரர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      விளையாட்டு
sports players condemn SL attack 2019 04 21

மும்பை : இலங்கை நாட்டில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து விளையாட்டு வீரர்கள் தங்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் பதிவு செய்துள்ளனர்.

ஈஸ்டர் பண்டிகை தினமான நேற்று இலங்கையில் பல்வேறு தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த கொடூர தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை நானூறுக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர். அதனால், பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது. இந்த தாக்குதலை கண்டித்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இலங்கை தாக்குதல் குறித்து அறிந்து அதிர்ந்து போயுள்ளேன். இது மனிதத்தன்மை அற்ற செயல் என்று சுரேஷ் ரெய்னா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.இதே போல் மற்ற வீரர்களும் இலங்கையில் நிகழ்ந்த தேவாலய குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து