திண்டுக்கல்லில் முன்விரோதத்தில் ரவுடியை ஓட ஓட விரட்டிக் கொன்ற கும்பல்

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2019      திண்டுக்கல்
24 dglmurder

திண்டுக்கல்,- திண்டுக்கல்லில் முன்விரோதம் காரணமாக ரவுடியை ஓட ஓட விரட்டிக்கொன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டைச் சேர்ந்த பாலு மகன் கார்த்திக்(35). இவருக்கு திருமணமாகி சந்திரா என்ற மனைவியும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர் ஞீண்டு மற்றும் மாதுளம்பழம் ஆகியவை வைத்து விற்பனை செய்து வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் திண்டுக்கல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு தனது வீட்டில் சாப்பிட்டு விட்டு அனுமந்தன் நகர் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரை தாக்கினர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்து கார்த்திக்கை அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியால் தாக்கத் தொடங்கினர்.
இதனால் பயந்து போன கார்த்திக் உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்தார். இருப்பினும் சுற்றி வளைத்த அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்தனர். உடல் முழுவதும் பல இடங்களில் வெட்டுக் காயங்களுடன் கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏ.டி.எஸ்.பி. சுகாசினி தலைமையில் போலீசார் அங்கு வந்து கார்த்திக் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை வெட்டி நபர்களையும் தேடி வருகின்றனர்.
போலீசார் விசாரணையில், கார்த்திக்கின் அண்ணன் செல்வம் என்பவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் கார்த்திக் சாட்சியாக உள்ளார். எனவே அதன் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு சிலருடன் அவருக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அவர்கள் வெட்டிக் கொன்றனரா? என்று விசாரித்து வருகின்றனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து