முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வெற்றி பெறும் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உறுதி

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019      மதுரை
Image Unavailable

மதுரை, - திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்  ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வெற்றி பெறும்  என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உறுதிபட  தெரிவித்தார்.
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் நல்லாசி பெற்று திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக எஸ்.முனியாண்டி போட்டியிடுகிறார். இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை புறநகர் கிழக்கு  மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.ஆலோசனை வழங்கினார். இதில் வேட்பாளர் எஸ்.முனியாண்டி, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் இரா.முத்துக்குமார், எம்ஜிஆர் அணி துணைச் செயலாளர் பாரி, மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் ஒம்,கே.சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா கூறியதாவது:
 நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றி வேட்பாளராக எஸ்.முனியாண்டி போட்டியிடுகிறார். இதில் நாம் அனைவரும் போட்டியிடுவது போல் பணியாற்ற வேண்டும். குறிப்பாக அனைத்து கிராமங்களில் அனுமதி பெற்று சின்னங்களை பொறிக்க வேண்டும்.மேலும் அனைத்து பூத்துகளிலும் நமது கழக தொண்டர்கள், தோழமை கட்சி நிர்வாகிகளையும் நாம் சேர்த்திட வேண்டும். வருகின்ற 6.05.2019 மற்றும் 11.05.2019 ஆகிய நாட்களில் முதலமைச்சர் நமது வேட்பாளரை ஆதாரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.  17 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் பணியாற்ற உள்ளனர்.  இந்த இடைத்தேர்தலில் நமது நிர்வாகிகள் வீடு, வீடாகச் சென்று அ.தி.மு.க.அரசின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும். இந்த தேர்தலில் நாம் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து