எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர் ,- விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல்கள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கருத்துக்கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர்அ.சிவஞானம். தலைமையில் இன்று (30.04.19) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்காக அமைக்கப்படவிருக்கும் வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் 23.04.2019 அன்று அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பாக பொது மக்களின் தகவலுக்காக உரியவாறு வெளியிடப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற இருந்த சாதாரண உள்ளாட்சித் தேர்தலுக்கு 7 நகராட்சிகளில் 450 வாக்குச்சாவடிகளும், 9 பேரூராட்சிகளில் 160 வாக்குச்சாவடிகளும், 11 ஊராட்சி ஒன்றியங்களில் 2109 வாக்குச்சாவடிகளும் மொத்தம் 2719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது, வெளியிட்டுள்ள 2019-வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலில் 7 நகராட்சிகளில் இராஜபாளைத்தில் 112 வாக்குச்சாவடிகளும், திருவில்லிபுத்தூரில் 66 வாக்குச்சாவடிகளும், அருப்புக்கோட்டையில் 72 வாக்குச்சாவடிகளும், சிவகாசியில் 62 வாக்குச்சாவடிகளும், சாத்தூரில் 43 வாக்குச்சாவடிகளும், விருதுநகரில்; 61 வாக்குச்சாவடிகளும், திருத்தங்கல்லில் 25 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 441 வாக்குச்சாவடிகளும், 9 பேரூராட்சிகளில் செட்டியார்பட்டியில் 15, சேத்தூரில் 18, மல்லாங்கிணரில் 15, மம்சாபுரத்தில் 19, காரியாபட்டியில் 15, சுந்தரபாண்டியத்தில் 15, எஸ்.கொடிக்குளத்தில் 15, வ.புதுப்பட்டியில் 15, வத்திராயிருப்பில் 18 என மொத்தம் 145 வாக்குச்சாவடிகளும், 11 ஊராட்சி ஒன்றியங்களில் அருப்புக்கோட்டையில் 154, விருதுநகரில் 284, காரியாபட்டியில் 149, திருச்சுழியில் 162, நரிக்குடியில் 177, இராஜபாளையத்தில் 207, திருவில்லிபுத்தூரில் 152, வத்திராயிருப்பில் 117, சிவகாசியில் 320, வெம்பக்கோட்டையில் 209, சாத்தூரில் 181 என மொத்தம் 2112 வாக்குச்சாவடிகளும் என ஆக மொத்தம் 2698 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி, மேற்கண்ட வாக்குச்சாவடி பட்டியல்கள் ஊரகப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலம், அனைத்து ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்களிலும், நகர்புற உள்ளாட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால்; அனைத்து நகராட்சி அலுவலகங்களிலும், பேரூராட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகங்களிலும் பொது மக்கள் பார்வைக்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளதால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் கூடுதலாக அமைக்கப்படவிருக்கும் வாக்குச்சாவடிகளிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் இருப்பதும் உறுதி செய்யப்படும். மேலும் வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கவோ அல்லது அருகில் உள்ள நல்ல கட்டிடங்கள் தேர்வு செய்யவோ ஆலோசனைகள் இருந்தால் 02.05.2019 தேதிக்குள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் எழுத்து பூர்வமாக கோரிகைகள் அளிக்கலாம். வாக்குச்சாவடிகள் அமைத்தல் தொடர்பாக வரப்பெறும் ஆட்சேபனைகள், கருத்துருக்களை பரிசீலித்து தேவைப்படின் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு 04.05.2019 அன்று வாக்குச்சாவடி வரைவு பட்டியல் இறுதி செய்யப்பட்டு 06.05.2019 அன்று வெளியிடப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்மாவட்ட ஆட்சித்தலைவர்அ.சிவஞானம். தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கோ.உதயகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர்சுரேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்)பழனி மற்றும் பேரூராட்சி, நகராட்சிகளின் வாக்குப்பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு
15 Dec 2025சென்னை, தமிழக்தில் பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என நினைக்கிறார்கள்: அமைச்சர் பேச்சு
15 Dec 2025திருச்சி, திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
-
சென்னையில் வரும் 27-ம் தேதி நா.த. கட்சி பொதுக்குழு கூட்டம் : சீமான் அறிவிப்பு
15 Dec 2025சென்னை, வருகிற 27-ந் தேதி நா.த.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
-
2026 சட்டசபை தேர்தல் போட்டியிடும் அ.தி.மு.க.வினருக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
15 Dec 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
-
ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
15 Dec 2025அம்மான், ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹாசன் நேரில் சென்று வரவேற்றார்.
-
இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
15 Dec 202512 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
-
உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்றுக்கொள்வதில் தவறு இல்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி
15 Dec 2025புதுக்கோட்டை, அனைவரும் உதயநிதி இந்த இயக்கத்திற்கு வலுவூட்டக்கூடியவர் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் ரகுபதி உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்று
-
அஸ்வின் பதிவிட்ட வார்த்தை விளையாட்டு
15 Dec 2025சென்னை, அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்யின் மகனான ‘ஜேசன் சஞ்சய்’ புகைப்படத்துடன் ‘பல்பு ஹோல்டர்’ படத்தை இணைத்து என்ன?
-
தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்
15 Dec 2025புதுடெல்லி, தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இன்று 19-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்ய அபுதாபியில் மினி ஏலம்
15 Dec 2025மும்பை, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடக்கிறது.
-
செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்: நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவு
15 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் பா.ஜ.க.
-
ஆஸி.க்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Dec 2025லண்டன், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் ஒரே ஒரு மாற்றத்துடன் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள
-
டெல்லியில் லயோனல் மெஸ்ஸி
15 Dec 2025புதுடெல்லி, மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்குள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


