முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்பாக இலவச செயல்முறைப் பயிற்சி

திங்கட்கிழமை, 6 மே 2019      விருதுநகர்
Image Unavailable

 ராஜபாளையம், - ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவியருக்கு மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்பாக இலவச செயல்முறைப் பயிற்சி 2019 ஏப்ரல் 22 முதல் 26 வரை “ஹேண்ட்ஸ் ஆன் டிரெயினிங் ஆன் ஆர்டினோ புரோகிராமிங் அண்டு ஹார்டுவேர்” என்ற தலைப்பில் நடைபெற்றது. இப்பயிற்சியை மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை இணை-பேராசிரியர் டாக்டர். மு. கார்த்திகேயன் அவர்கள் தொடங்கி வைத்தார். 74 மாணவர்கள் பங்கேற்ற இந்த பயிற்சியில் 14 வெவ்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ஆர்டினோ போர்டு பற்றிய அடிப்படை தொழில் நுட்பத்திலிருந்து எவ்வாறு புதுமையான மினி பிராஜக்ட் செய்ய முடியும் என்பதை மாணவர்கள் 5 நாட்களில் கற்றனர். மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறையைச் சேர்ந்த அனுபவமிக்க உதவி பேராசிரியர்கள் அருண் குமார், ஜெயந்தி மற்றும் சர்மிளாகுமாரி மாணவர்களுக்கு பயனுள்ள பல தொழில்நுட்பங்களை எளிமையாக கற்றுக் கொடுத்தனர். பயிற்சியின் இறுதியாக மாணவர்களின் செயல் திறனை சோதிக்கும் வகையில் செயல்திறன் போட்டி நடைபெற்று வெற்றி பெற்ற குழுவிற்கு பரிசு வழங்கப்பட்டது. இறுதியாக 26ஆம் தேதி நடைபெற்ற விழாவில் உதவி பேராசிரியர் ஆ.அருண் குமார் தொகுத்து வழங்க, கல்லூரி முதல்வர் முனைவர் ஜவஹர் அவர்கள் மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். இறுதியாக உதவி பேராசிரியர் ஜெயந்தி   நன்றியுரை வழங்கினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து